"ஆத்தி, இது நம்ம லிஸ்ட்'ல இல்லையே.." 'தமிழ்'ல பேசி அசத்திய 'ஹிட்மேன்'.. "ஓஹோ இதான் விஷயமா??..." 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, எந்த அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில், ஒரு லீக் போட்டிகளில் கூட ஆடாது.


மாறாக, சென்னை அணி தற்போது மும்பையில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக, ஆறு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அணிகளுக்கும் இதே நிலை தான்.

ஐபிஎல் அணிகளுள் பலம் வாய்ந்த அணியான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, தங்களது முதல் 5 போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவுள்ளது. இதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், பயிற்சியை மேற்கொள்ள வேண்டி, சென்னை வந்தடைந்துள்ளனர்.



அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் (Rohit Sharma) சென்னை வந்து சேர்ந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

 

அதில், தமிழில் பேசும் ரோஹித் ஷர்மா, 'வணக்கம் சென்னை. மும்பை இந்தியன்ஸ் இங்கயும் வந்துட்டோம்' என கூறுகிறார். பொதுவாக, சென்னை அணியில் இடம்பெறும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள், தமிழில் பேசி அசத்தும் நிலையில், தற்போது சென்னையில் பயிற்சிக்காக வந்து சேர்ந்த மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தமிழில் பேசி அசத்தியுள்ளது, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

 

இந்த சீசனின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்