‘சச்சினுக்கு அப்றம் இந்த சாதனையை தொட்ட முதல் இந்திய வீரர்’.. வரலாறு படைத்த ‘ஹிட்மேன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பையில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று(02.07.2019) பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. அதில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இதுவரை விளையாட வாய்ப்பு வழங்கப்படாத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து அதிரடிகாட்ட ஆரம்பித்தனர். இதில் ரோஹித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக சதமடித்த(4 சதங்கள்) இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் உலகக்கோப்பையில் 6 சதங்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள்(544) அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

ICCWORLDCUP2019, ROHITSHARMA, INDVBAN, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்