'சச்சினின் அதே ஷாட், அதே சிக்ஸ்... 2003 உலகக் கோப்பையை பிரதிப்பலித்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சச்சின் டெண்டுல்கர் விளாசிய சிக்சரைப் போன்றே, தற்போது மான்செஸ்டரில் விளாசிய சிக்சரும் இருப்பதாக ஐசிசி புகழாரம் சூட்டியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மோதின. இப்போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, அபாரமாக ஆடி, 14 பவுண்டரி, 3 சிக்சர்களுடன், 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், ஐசிசி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்கா செஞ்சூரியனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. உலகின் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் பந்தை, ஆப்சைடில் அப்பர்-கட் அடித்து, சச்சின் டெண்டுல்கர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமையன்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியிலும், அதேபோன்ற ஒரு சிக்சர் விளாசப்பட்டது. 27-வது ஓவரை ஹசன் வீசியபோது, ஆப்சைடில் அப்பர் கட் அடித்து ரோகித் சர்மா சிக்சர் விளாசியுள்ளார். அதே மாதிரி ஷாட், அதே மாதிரி சிக்சர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்