'இந்த மனுஷன் மனசுல நின்னுட்டாரு யா'... 'மைதானத்திற்குள் ரோஹித் ஷர்மா செஞ்ச விஷயம்'... தூக்கிவைத்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மைதானத்திற்குள் ரோஹித் ஷர்மா செய்த செயல் ஒன்று நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

'இந்த மனுஷன் மனசுல நின்னுட்டாரு யா'... 'மைதானத்திற்குள் ரோஹித் ஷர்மா செஞ்ச விஷயம்'... தூக்கிவைத்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் 14ஆவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. இதில் வீரர்களின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற சொல்லலாம். வீரர்கள் ஏதாவது சர்ச்சையாகச் செய்யும்போது அதைப் பயங்கரமாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களையும் மனதார பாராட்டத் தயங்குவது இல்லை.

அந்த வகையில் நெட்டிசன்களின் பாராட்டு மழையில் தற்போது நனைந்து கொண்டிருப்பவர் ரோஹித் ஷர்மா. அதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்து வந்த ஷூ தான். ஹைதரபாத் அணியுடனான போட்டியின்போது நீலம் மற்றும் இளம் பச்சை வண்ணங்களிலான ஷூவை ரோஹித் ஷர்மா அணிந்து வந்தார். அதில் பவளப் பாறைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

Rohit Sharma shares third message for environment on his shoes

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரோகித் சர்மா, "கடற்பாறைகள் கடலின் இதயமும் ஆன்மாவும் போன்றவை. கடற்பாறைகள் நலமாக இருந்தால்தான் கடல் நலமாக இருக்கும். கடல் மீதான எனது அன்பு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது." என்று கூறியிருக்கிறார்.

மேலும் நமது எண்ணத்திலும், நடவடிக்கையிலும் சிறு மாற்றத்தை உருவாக்க முடிந்தால்கூட அது சுற்றுச்சூழலுக்குப் பேருதவியாக இருக்கும். கடல்களைப் பாதுகாப்பது நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். பவளப் பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஒட்டிய கடலில் இருக்கும் பெருந் தடுப்புப் பவளத் திட்டு உலகிலேயே மிகப்பெரிய பவளப் பாறையாகும்.

இது சுமார் 2,500 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 1995-ஆம் ஆண்டுக்குப்பிறகு பருவநிலை மாறுபாடு காரணமாக அதில் 50 சதவிகித உயிரினங்கள் அழிந்துவிட்டன. 50 சதவீத உயிரினங்கள் அழிந்து விட்டது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இதன் காரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ரோஹித் ஷர்மா இதனைச் செய்து வருகிறார். அதேநேரத்தில் பவளப் பாறைகளைப் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களைப் பயன்படுத்துவது ரோஹித் ஷர்மாவுக்கு இது முதல்முறையல்ல.

இந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே வெவ்வேறு வகையான வாசகங்களைக் கொண்ட காலணிகளை அவர் அணிந்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது உலகில் அருகிவரும் காண்டாமிருகங்களுக்கு ஆதரவான வாசகத்தைக் கொண்ட காலணியை ரோஹித் ஷர்மா அணிந்திருந்தார்.

கிரிக்கெட் ஆடுவது தமது கனவு என்றும் உலகைச் சிறந்த இடமாக மாற்ற உதவுவது தனது பணி என்றும் அப்போது கூறியிருந்தார். இதேபோல 14-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது நெகிழி இல்லாத கடல் என்ற வாசகம் கொண்ட காலணியை அணிந்திருந்தார். அதில் கடல் ஆமைகளின் படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்