'அட என்னப்பா நீ.. அந்த ஷாட் எப்படி அடிக்கணும்னு நா சொல்றேன்'.. ரசிகர்கள் அட்வைஸ் குறித்து வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெருகி வரும் இன்றைய சமூக வலைதள காலக்கட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தாங்கள் நினைப்பதை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் வீரர்களுக்கு சென்று சேரும் வகையில் அதே சமயம் கிரியேட்டிவிட்டியுடன் கூற முடிகிறது.

அவ்வகையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஹிட்மேனுமான ரோஹித் ஷர்மா, ரசிகர்கள் தனது விளையாட்டை கூர்ந்து கவனிப்பதாகவும், மீம்ஸ், ட்ரோல் மூலம் தொடர்ந்து தவறுதலான அணுகுமுறைகளை அம்பலப்படுத்திவிடுவார்கள், அதனால் இந்திய வீரர்களுக்கு சவாலே ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதுதான் என்று பேசியுள்ளார்.

அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசிய ரோஹித் ஷர்மா,  தனது பேட்டிங் ஸ்டைல் கவர் ட்ரைவில்  எப்படி இருக்க வேண்டும், ஸ்ட்ரைட் டிரைவில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சில ரசிகர்கள் லெக்சர் எடுப்பார்கள். அந்த அக்கறையை தான் மதிப்பதாகவும், அதே சமயம் அந்த ரிஸ்க் எடுப்பதால்தான் அவர்கள் தன்னை அங்கீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்றும் ரோஹித் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில்  ரசிகர் ஒருவர் ரோஹித்தைப் பார்த்து, 2015 ஆம்  ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னான ரோஹித்தின் சிக்ஸர்கள் 130 என்றும், அதற்கு அடுத்த இடத்தில் 55 சிக்ஸர்கள் எடுத்து கோலி உள்ளதாகவும் தெரிவித்திருந்தாராம். ஆக, கோலியை விட 75 சிக்ஸர்கள் அதிகமாக, தான் எடுத்ததற்கு காரணம் அவ்வாறு ரிஸ்க் எடுப்பதுதான் என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்