ஏன் உலகக் கோப்பைக்கு ‘தல’தோனி வேணும்?.. ‘ஹிட்மேன்’ கூறிய அசத்தலான காரணங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் தோனியின் முக்கியத்துவம் குறித்து இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகான உலகக் கோப்பை தொடர் மே மாதம் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ளது. இதில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன. உலகக் கோப்பையில் விளையாட ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடு மற்றும் இளம் வீரர் ரிஷப் பண்ட் இல்லாதது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தோனி, தவான் ரோஹித் ஷர்மா போன்ற உலகக் கோப்பையில் விளையாடைய அனுபவமுல்ல வீரர்கள் உள்ளது பெரும் பலமாக கருதபடுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனியின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தியா டுடே சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,‘தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே மைதானம் எப்படி உள்ளது, அதற்கு எந்த விதமான பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்குவார். இவர் இளம் வீரர்களை சிறப்பாக நடத்துவார். குல்தீப், சாஹல் போன்ற ஸ்பின்னர்களுக்கு களத்தில் இவரின் அறிவுரை பெரிதும் உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவரின் பங்கு மிக முக்கியம். துணை கேப்டனாக விராட் கோலிக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும். கடந்த உலகக் கோப்பை போட்டியில் சச்சின், சேவாக போன்ற சீனியர் வீரர்கள் தோனிக்கு பக்கபலமாக இருந்தனர். இந்தமுறை அந்த பொறுப்பு எங்களுக்கு உள்ளது’ என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, MSDHONI, ROHITSHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்