"சுயநலம் இல்லாத மனுஷன்".. புஜாராவுக்காக ரோஹித் செஞ்ச தியாகம்.. பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

                                  Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தல் வெற்றி பெற்று, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையையும் தக்க வைத்து கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பது போல தெரிந்த சூழலில், இரண்டாவது இன்னிங்சில் போட்டியே மாறி போனது. 1 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி, ஜடேஜா சூழலில் சிக்கித் தவித்தது.

கடைசி 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி, 113 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. இந்த வெற்றியின் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது இந்திய அணி.

இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்றே ஆக வேண்டுமென்ற சூழலில், மறுபக்கம் தொடரை வெல்லும் முனைப்பிலும் இந்திய அணி உள்ளது. இதனிடையே, அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், ஏதும் மாற்றம் செய்யப்படாத சூழலில், ஜெய்தேவ் உனத்கட் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 2 ஆவது டெஸ்ட் போட்டியில், புஜாராவுக்காக கேப்டன் ரோஹித் ஷர்மா செஞ்ச தியாகம் தொடர்பான விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி, இந்திய வீரர் புஜாராவின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். முதல் இன்னிங்சில் ரன் எடுக்காமல் அவுட்டாகி இருந்த புஜாரா, இரண்டாவது இன்னிங்சில் கடைசியாக பவுண்டரி அடித்து 100 ஆவது போட்டியில், இந்திய அணி வெற்றி பெறவும் உதவி செய்திருந்தார்.

இதற்கு மத்தியில், புஜாரா மற்றும் ரோஹித் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த சூழலில் மேத்யூ குஹனேமன் பந்தை எதிர்கொண்ட ரோஹித் அதனை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்து விட்டு வேகமாக சிங்கிள் ஓடினார். தொடர்ந்து, இரண்டாவது ரன்னையும் அவர் ஓடுவதற்கு புஜாராவை அழைக்க அவரும் ஓடினார். ஆனால், ரோஹித் அங்கே நிற்க அதற்குள் பந்தை கீப்பர் கையில் வீசினார் ஹேண்ட்ஸ்கோம்ப்.

 

மறுபக்கம், புஜாரா நான் ஸ்ட்ரைக் எண்டுக்கு வந்ததால் அவருக்காக தான் ஸ்ட்ரைக்கர் திசையில் ஓடி, தனது விக்கெட்டை தியாகம் செய்தார் ரோஹித். அவர் டெஸ்ட் போட்டியில்; ரன் அவுட்டாவது இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், இது தொடர்பாக ரோஹித்தை பாராட்டி பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ட்வீட் செய்துள்ளார். "புஜாராவிற்காக ரோஹித் செய்தது தான் லீடர்ஷிப்" என பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

ROHIT SHARMA, PUJARA, RITEISH DESHMUKH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்