‘அதுல எனக்கும் பங்கு இருக்கு’.. ‘ரோஹித் முதல் அரைசதம் அடிச்சது என் பேட்டில்தான்’.. ஸ்டார் ப்ளேயர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் ஷர்மா முதல் அரைசதத்தை அடித்தது தன்னுடைய பேட்டில் தான் என தினேஷ் கார்த்திக் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அப்போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகி வெளியிருந்தார். அப்போது பெவிலியலின் அமர்ந்திருந்த ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்கின் பேட்டை வாங்கிக்கொண்டு களமிறங்கினார். தோனியுடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா, 40 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார். அதில், ‘ரோஹித் அடித்த முதல் அரை சதம் என்னுடைய பேட்டில்தான். அந்த அரைசதத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. நான் கோல்டன் டக் ஆகிவிட்டு பெவிலியன் திரும்பியதும் பேட்டை பார்த்துத் திட்டினேன். அப்போது என்னிடம் வந்த ரோஹித் ஏன் என்னாச்சு? எனக் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். இந்த பேட் உனக்குப் பிடிக்கவில்லையா? எனக் கேட்டு, அதை வாங்கிக்கொண்டு களமிறங்கினார். அப்போது தென் ஆப்பிரிக்க பவுலர்களை அவர் வெளுத்து வாங்கினார். அது ஒரு அற்புதமான, மறக்க முடியாத இன்னிங்ஸ்’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

அப்போட்டியில் இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது ரோஹித் ஷர்மா களமிறங்கினார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தை கடந்ததால், தென் ஆப்பிரிக்காவுக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்