‘திடீர்ன்னு இவருக்கு இப்டி ஆய்டுச்சே..!’- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேகொள்ள உள்ளது. இதற்கான அணி வீரர்களின் பட்டியலில் நேற்று திடீரென ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 ஃபார்மெட்டுகளில் கேப்டன் ஆக நியமிகப்பட்டுள்ள ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பில் தொடர உள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் தென் ஆப்பிரிக்காவில் அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் துணை கேப்டன் ரோகித் சர்மா.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஆக களம் இறக்கப்பட இருந்த ரோகித் சர்மா அணிப் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடருக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயம் சற்று கடுமையானதாக இருப்பதால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தே விலகும் சூழலில் ரோகித்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலுமே ரோகித் பங்கேற்கப்போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோகித் சர்மாவுக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.
பிரியங்க் பஞ்சல் குஜராத்தைச் சேர்ந்தவர். ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் ஆக இந்திய A அணியில் கேப்டன் ஆக விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு கைகளில் ஏற்பட்ட காயத்தினால் அவர் இடத்தில் பிரியங்க் விளையாட உள்ளார். சமீபத்தில் இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 96 ரன்களை எடுத்த பிரியங்க் நேற்று இரவு திடீரென இந்திய அணியில் இணைய மும்பை அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற வைக்க முக்கியக் காரணிகளுள் ஒன்றாக இருந்தவர் பிரியங்க். 100 எஃப்சி போட்டிகளில் 7011 ரன்கள் விளாசியுள்ளார் பிரியங்க். இதில் 24 சதங்கள் மற்றும் 25 அரை சதங்கள் உள்ளன. அதிகபட்ச ஸ்கோர் ஆக 314 ரன்கள் அடித்துள்ளார்.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்காவிலேயே அடுத்து நடக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தொடர் கேப்டன்ஸி சர்ச்சைகள்... கோலி குறித்து மனம் திறந்த ரோகித் சர்மா..!
- “கோலி இல்லாமலயே ரோகித் இதை பண்ணியிருக்காரு”.. சர்ச்சையை கிளப்பிய கங்குலியின் ‘லேட்டஸ்ட்’ பேச்சு..!
- நடுமைதானத்தில் ரஜினி ஸ்டைலில் கெத்தா… மாஸா… கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் ஐயர்!
- ‘கூல் ரோகித் கூல்… நோ டென்ஷன்…’- கேப்டன்ஷி குறித்து ரோகித் சர்மா என்ன சொல்றார்ன்னு பாருங்க..!
- 'இவர்' கைகளில் இந்திய அணி பத்ரமாகவே இருக்கும்..!- கம்பீருக்கு என்ன கோபம்… இப்படி பேசயிருக்காரே..!
- "கோலிகிட்ட நா பெர்சனலா கேட்டுக்கிட்டேன், ஆனா அவருதான்..."- கேப்டன்ஸி சர்ச்சைகளுக்கு நடுவே கங்குலி ஓப்பன் டாக்..!
- ‘காட்டுக்குள் ஹோட்டல்’!.. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் தங்கப்போற இடம் இதுதானா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?
- ரோகித்தை ODI கேப்டனாக்க ‘இவங்க’ எடுத்த முடிவு தான் காரணமா..? கசிந்த தகவல்..!
- ‘நாங்க சொன்னத கோலி கேக்கல… அதான்..!’- ‘கேப்டன்ஸி’ சர்ச்சைகளுக்கு நடுவில் கங்குலியின் புது விளக்கம்!
- ‘எனக்கு எதிரா சதி நடந்தது..!’- புது சர்ச்சையைக் கிளப்பும் ரவி சாஸ்திரி