அணியில் இடம்பெறாத தினேஷ் கார்த்திக்.. கொதித்து எழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்.. கடைசியில் ரோஹித் கொடுத்த 'பரபரப்பு' விளக்கம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடர், தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மண்டபத்தில் வேறமாரி என்ட்ரி கொடுத்த பெண்.. "மாப்பிள்ளை எடுத்த ஓட்டம்".. அதிர்ந்து போன மணப்பெண்!!

முன்னதாக, லீக் தொடர்களில் தங்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

ஆனால், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் இதுவரை இரண்டு போட்டிகள் ஆடியுள்ள இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஃபோர்ஸ் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது இந்தியா. இதன் பின்னர், நேற்று (06.09.2022) இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 173 ரன்கள் எடுத்திருந்தது. இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதமடித்து அசத்தி இருந்தனர்.

இறுதியில், ஒரு பந்தை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டிய இலங்கை அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மறுபக்கம், இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, மற்ற போட்டிகளின் வெற்றி வாய்ப்பை பொறுத்து, ரன் ரேட் உதவியுடன் தான் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலை உள்ளது.

இதனிடையே, இந்திய அணியின் வீரர்கள் தேர்வு தொடர்பாக ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள், கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதிலும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவது பற்றி ஏரளாமானோர் இந்திய அணியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். லீக் சுற்றின் இரண்டு போட்டிகளில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி இருந்தாலும், ஒரே ஒரு பந்துக்கு தான் பேட்டிங் செய்திருந்தார். இது பற்றி கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.

தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி பேசி இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா, "மிகவும் எளிதான காரணம் தான். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை. அதனால் தான், தினேஷுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது ஃபார்ம் காரணமாக ஒன்றும் அவர் வெளியே உட்கார வைக்கப்படவில்லை. மிடில் ஆர்டரில் உடன் இருக்கும் பேட்ஸ்மேனின் நெருக்கடியை பகிர்ந்து கொள்ள ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் தினேஷிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என விளக்கமளித்துள்ளார்.

Also Read | பசியில் உணவு ஆர்டர் செய்த வாலிபர்.. பார்சல திறந்து பாத்ததும் உள்ள இருந்த 'கடிதம்'.. "ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுருச்சு"

CRICKET, ROHIT SHARMA, DINESH KARTHIK, ரோஹித், தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்