இதை மறக்கலாமா ரோஹித்?.. டாஸ் போடும்போது நடந்த சம்பவம்.. Fun பண்றாங்கப்பா.. India VS New Zealand

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது போட்டியில் டாஸ் போடும்போது ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்ஷன் பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களை ஆடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையே முதலாவதாக ஒரு நாள் தொடர் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், 208 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன்மூலம் சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷன் ஆகியோருக்கு பின் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. 131 ரன்களில் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், ஏழாவது வீரராக களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல், போட்டியின் முடிவை மாற்றி எழுதும் வகையில் ஆடி இருந்தார். அடுத்தடுத்து சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் என அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல், 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும் கடைசி ஓவரில் அவருடைய விக்கெட்டை தாக்கூர் காலி செய்தார். இதனால் இந்தியா போட்டியில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டிராய்ப்பூரில்  நடைபெறுகிறது. இதில் டாஸ் போடும்போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. வர்ணனையாளர் ரவி சாஸ்திரி டாஸ் போடும் நிகழ்வு குறித்து அறிவித்தார். அப்போது ரோஹித், நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், போட்டி நடுவர் ஸ்ரீநாத் ஆகியோரும் அங்கு இருந்தனர். தொடர்ந்து, ரோஹித் காசை சுழல செய்தார். அப்போது, நடுவர் ஸ்ரீநாத் ரோஹித்திடம் டாஸ் வென்றுவிட்டீர்கள் என சொல்ல, பேட்டிங்கா? ஃபீல்டிங்கா? என ரோஹித் அறிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, ரோஹித் சில வினாடிகள் யோசித்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட லேதம் சிரிக்க, நடுவர் ஸ்ரீநாத்தும் சிரித்துவிட்டார். மிகுந்த யோசனைக்கு பிறகு பவுலிங்கை தேர்வு செய்வதாக ரோஹித் புன்னகையுடன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

INDIA, NEWZEALAND, ROHIT SHARMA, TOSS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்