"எலேய், நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு".. இளம் வீரர் அடித்த சிக்ஸ்.. ஒரு நிமிஷம் Stuck ஆகி போன ரோஹித்.. வைரலாகும் ரியாக்ஷன்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷும் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வெற்றியின் காரணமாக தற்போது ஒரு நாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடமும் பிடித்துள்ளது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "25 கோடி ரூபா லாட்டரில ஜெயிச்ச ஆள ஞாபகம் இருக்கா?".. லேட்டஸ்ட்டா வெளியான தகவல்.. "பம்பர் பரிசு அடிச்சா கவனமா இருங்கப்பா"

இந்த தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (24.01.2023) நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

முதல் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து சாதனை புரிந்த சுப்மன் கில், இந்த போட்டியில் சதமடித்து அசத்தி உள்ளார். அதே போல, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் சதமடித்து பட்டையை கிளப்பி உள்ளார் ரோஹித் ஷர்மா. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே தனியாளாக இந்திய அணி பந்துவீச்சை சிதறடித்தபடி இருந்தார். 100 பந்திகளில் 12 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 138 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் நியூசிலாந்து அணி சில விக்கெட்டுகளை இழக்க, 42 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தொடரையும் கைப்பற்றி தற்போது ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த நிலையில், சுப்மன் கில் அடித்த சிக்ஸரை பார்த்து விட்டு ரோஹித் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ, அதிக கவனம் பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில், இளம் வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. 78 பந்துகளில், 13 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 112 ரன்களை எடுத்திருந்தார் கில். அதிலும் அதிகம் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் வீசிய ஒரே ஓவரில், 4 போர்கள் மற்றும் 1 சிக்சருடன் 22 ரன்களை சேர்த்திருந்தார் சுப்மன் கில்.

Images are subject to © copyright to their respective owners.

இதனை பார்த்ததும் மறுபக்கம் கிரீஸில் நின்ற ரோஹித் ஷர்மா, ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் சில ரியாக்ஷன்களையும் கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இதே பெர்குசன் ஓவரில் தான் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 200 ரன்களை ஒரு நாள் போட்டியில் எட்டி சுப்மன் கில் சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ

CRICKET, ROHIT SHARMA, SHUBMAN GILL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்