இந்திய அணிக்கு புதிய கோச் ஆன டிராவிட்..‘அவர் கூட எப்போ வேலை பார்க்க போறோம்னு காத்துகிட்டு இருக்கும்’.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதற்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும், நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இருந்து ராகுல் டிராவிட் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக இருக்க அணுகியபோது அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க ஒத்துகொண்டுள்ளார். அதனால், இதுவரை எந்த பயிற்சியாளருக்கும் வழங்காத வகையில், ரூ.10 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதுக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து தெரிவித்தார்.

அதில், ‘இந்திய அணிக்கு அவர் மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள். அவர் இந்திய அணியின் மிகவும் தலைசிறந்த வீரர். அவருடன் வேலை செய்வது அருமையாக இருக்கும். அந்த நாளை எதிர்பார்த்து காத்துள்ளோம்’ என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

BCCI, ROHITSHARMA, RAHULDRAVID, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்