‘சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி’... ‘ஒருவழியாக ஃபிளைட் பிடித்த அதிரடி வீரர்’... ‘வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுவக்க வீரர் ரோகித் சர்மா ஒருவழியாக இன்று தனது ஆஸ்திரேலிய தொடருக்கான பயணத்தை துவக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரின் சில போட்டிகளில் பஙகேற்காத மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்று தனது அணியை இறுதிப்போட்டியில் வெற்றி பெற செய்தார். மேலும் ஐபிஎல்லின் 5-வது கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.
இதற்கிடையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் பிசிசிஐ அறிவித்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து சர்ச்சை எழுந்த நிலையில், துபாயில் இருந்து ரோகித் சர்மா இந்திய அணியுடன் செல்லாமல் பிட்னஸை நிரூபிக்க இந்தியா திரும்பினார். விராட் கோலியும் இதுகுறித்து பிசிசிஐ-க்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
ஏனெனில் காயத்துடன் இருந்த வீரர்கள் சிலரும் ஆஸ்திரேலியா சென்று சிகிச்சை எடுத்தநிலையில் ரோகித் சர்மா பங்கேற்காதது விமர்சனம் எழுந்தது. அதன்பின்னர் ரோகித் சர்மாவின் தந்தைக்கு கொரோனா என்பதால் தான் அவர் இந்தியா திரும்பினார் என்று பிசிசிஐ விளக்கமளித்தது.
நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு ஒருநாள், டி20 தொடரில் இல்லாமல், டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா இடம்பெற்றார். ஆயினும் பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம் ஏற்பட்டதையடுத்து அவர் பெங்களூரு என்சிஏவில் டிராவிட் தலைமையில் பயிற்சி மேற்கொண்டார். கடந்த 11-ம் தேதி ரோகித்தின் பிட்னஸ் பரிசோதிக்கப்பட்டு, அவர் அதை நிரூபித்த நிலையில், இன்றைய தினம் ஆஸ்திரேலியாவிற்கான தனது பயணத்தை துவக்கியுள்ளார்.
மும்பையிலிருந்து துபாய் வழியாக அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியை சென்றடைய உள்ளார். மேலும் அங்கு தனது 14 நாட்கள் குவாரன்டைனை மேற்கொள்ளவுள்ளார். இந்த குவாரன்டைன் காலத்தில் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்றும், இதையடுத்து அவர் பரிசோதிக்கப்பட்டு, தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ரோகித்தின் பங்கேற்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ரோகித் பங்கேற்கவுள்ள 3-வது போட்டி ஜனவரி 7-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஓய்வுக்குப் பின்’... ‘மீண்டும் பேட்டிங்கை கையிலெடுத்த சிக்ஸர் மன்னன்’... ‘அனுமதிக்கு வெயிட்டிங்’... ‘வெளியான ஆச்சரிய தகவல்’...!!!
- ‘கோலி இல்லனா என்ன?’... ‘கேப்டனா அவர் இருந்தப்போ ஜெயிச்சுருக்காரு’... ‘அதனால அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில்’... ‘அவருக்கு நெருக்கடி வராது’... ‘கவாஸ்கர் குறிப்பிட்ட சீனியர் வீரர்’...!!!
- 'டீமை விட்டு அவர தூக்கலாம்னு இருந்த நேரம்’... ‘தோனி கொடுத்த வாய்ப்பு’... ‘சரியா யூஸ் பண்ணிக்கிட்டார்’... ‘பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்’...!!!
- 'ஒத்த பவுலர வச்சு... எங்க மொத்த பேரைக்கும் ஸ்கெட்ச்-ஆ'?.. 'funny guys!'.. கோலியின் மாஸ்டர் ப்ளான்!.. ஆஸ்திரேலியா செம்ம ஷாக்!!
- ‘அப்போ இருந்தது வேற டீம்’... ‘அந்த 3 பேரு இப்ப இருக்காங்க’... ‘இந்திய அணியை எச்சரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்’...!!!
- 'உன்ன நம்பி 'டீம்'ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட!'.. உச்சகட்ட கோபத்தில் கோலி!
- "இன்னும் நெறய இருக்கு..." ட்விட்டரில் 'ரோஹித்' ஷர்மா போட்ட 'கமெண்ட்'... 'உச்சக்கட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!!
- 'இப்டி ஆடுனா எப்படி தம்பி’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’... ‘மோசமான ஃபார்மால் இளம் வீரரை கழட்டிவிட திட்டம்’...!!!
- ‘இரண்டு தமிழக வீரர்களையும் சேர்த்து’... ‘3 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே இருங்க’... ‘பிசிசிஐ போட்ட உத்தரவு’... 'வெளியான தகவல்’...!!!
- அன்னைக்கு 241 ரன் அடிக்க ஒரு ‘பாட்டு’ தான் காரணம்.. ரொம்ப பிடிச்ச ஒரு ‘ஷாட்டை’ கடைசிவரை அடிக்கவே இல்ல.. ‘மாஸ்டர்’ சொன்ன ரகசியம்..!