VIDEO: ரோஹித் அடிச்ச ‘பந்து’ எங்கபோய் விழுந்திருக்கு பாருங்க.. நேத்து மேட்சில் நடந்த ‘சுவாரஸ்ய’ சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த பந்து நேராக விராட் கோலி கைக்கு சென்ற சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

அபுதாபி மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் இந்தியா பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அதனால் நீண்ட நேரமாக இவர்களது விக்கெட் எடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் பவுலர்கள் திணறினர். இதில் நவீன்-உல்-ஹக் வீசிய போட்டியின் 5-வது ஓவரில் சிக்சர், பவுண்டரிகளை ரோஹித் ஷர்மா விளாசினார்.

அப்போது அந்த ஓவரின் 4-வது பந்தில் ரோஹித் ஷர்மா சிக்சர் விளாசினார். அந்த பந்து பெவிலியனில் அமர்ந்திருந்த கேப்டன் விராட் கோலிக்கு நோக்கி சென்றது. உடனே அந்த பந்தை கேட்ச் பிடித்து அவர் தூக்கி வீசினார். இதனால் பெவிலியனில் சிரிப்பலை ஏற்பட்டது.

ஒருபக்கம் ரோஹித் ஷர்மா (74 ரன்கள்), மறுபக்கம் கே.எல்.ராகுல் (69 ரன்கள்) என மாறிமாறி சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்த கூட்டணி 140 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனை அடுத்த களமிறங்கிய ரிஷப் பந்த 27 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 35 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை இந்தியா குவித்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, ROHITSHARMA, T20WORLDCUP, INDVAFG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்