'ஹிட்மேனை செமத்தையா பதம் பார்த்த பந்து'... 'வலியால் துடித்த ரோஹித்'... 'பவுலிங்கில் பீதியை கிளப்பிய வீரர்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

148 கிமீ வேகத்தில் வந்த பந்து ரோஹித் சர்மாவைப் பலமாகத் தாக்கியதில் அவர் துடித்துப் போனார்.

'ஹிட்மேனை செமத்தையா பதம் பார்த்த பந்து'... 'வலியால் துடித்த ரோஹித்'... 'பவுலிங்கில் பீதியை கிளப்பிய வீரர்'... வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று (மார்ச் 23) புனேவில் துவங்கியது.

Rohit Sharma Hit On Elbow By Mark Wood’s Quicker Ball

டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றார். கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி இப்போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான்  களம் இறங்கினர். அப்போது 4வது ஓவரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வுட்ஸ் 148 கிமீ வேகத்தில் பந்தை வீசினார். அப்போது ஹிட் மேன் ரோஹித் சர்மா அதனை எதிர்கொண்டார்.

Rohit Sharma Hit On Elbow By Mark Wood’s Quicker Ball

ஆனால் அந்த பந்தானது எதிர்பாராத விதமாக ரோஹித் சர்மாவின் முழங்கையைப் பலமாகத் தாக்கியது. இதனால் ரோஹித் ஷர்மா வலியால் துடிதுடித்துப் போனார். உடனே மருத்துவ குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் வலி அதிகமாக இருந்த நிலையிலும் அவர் தொடர்ந்து ஆடினார். இருப்பினும் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையே ரோஹித் சர்மாவைத் தாக்கிய பந்தின் வேகத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போனார்கள். இருப்பினும் அவர் பெவிலியனுக்கு திரும்பாமல் தொடர்ந்து ஆடியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் ஹிட்மேனை புகழ்ந்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்