"மேட்ச் பத்தி கேளுங்க பாஸ்!".. ரோஹித் இவ்ளோ ஜாலியா பேசுவாரா? பிரஸ் மீட்டில் சுவாரஸ்யம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றிருந்த டி 20 தொடரை, இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வென்று, இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது.
இதன் முதல் போட்டி, நாளை மொஹாலியில் வைத்து ஆரம்பமாகவுள்ளது. ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் இதுவரை இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாளைய போட்டியில் தான் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியை தலைமை தாங்கவுள்ளார்.
முக்கியமான டெஸ்ட்
ஒரு நாள் மற்றும் டி 20 என இரண்டிலும் கேப்டனாக தன்னுடைய திறமையை நிரூபித்த ரோஹித் ஷர்மா, டெஸ்ட் போட்டியிலும் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிலை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே போல, நாளைய டெஸ்ட் போட்டி, இந்திய வீரர் விராட் கோலிக்கு மிக முக்கியமான டெஸ்ட் போட்டியாகும்.
கோலியின் நூறாவது டெஸ்ட்
அவர் களமிறங்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்ற சிறப்பு தான் அது. முன்னணி வீரர்கள் பலரும், கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நூறாவது போட்டி குறித்து கோலியும் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேல், ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் கோலி, தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியில், சதத்தை அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு
அது மட்டுமில்லாமல், கோலியின் நூறாவது டெஸ்ட் போட்டியைக் காண, 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், கோலியின் பேட்டிங்கை காண ஆவலாக உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.
ரோஹித்தின் பதில்
அப்போது அவரிடம், பத்திரிகையாளர் ஒருவர், ஏன் போட்டியை பற்றி அதிகம் பேசவில்லை எனக்கூறி, பார்வையாளர்கள் மீண்டும் திரும்புவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த பத்திரிக்கையாளரிடம் பதில் தெரிவித்த ரோஹித் ஷர்மா, "நீங்கள் அப்படி ஏதாவது கேள்வி கேட்டால் தானே என்னால் பதில் சொல்ல முடியும். மேட்ச் தொடர்பான கேள்விகளை யாரும் கேட்கவில்லை. நீங்கள் ஒரு ஆள் மட்டும் தான் போட்டிக்கு தொடர்பான கேள்வியை கேட்டீர்கள்.
கோலி குறித்த கேள்விகள்
ரசிகர்கள் திரும்புவது பற்றியும், பிட்ச் குறித்தும், அணியின் காம்பினேஷன் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை' என ரோஹித் ஷர்மா தெரிவித்தார். கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி குறித்து, கோலியே பல கருத்துக்கள் தெரிவித்த நிலையில், ரோஹித் ஷர்மாவிடம் அது குறித்த கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புது ரெக்கார்டு படைக்க போகும் கோலி & AB டிவில்லியர்ஸ்.. நட்பின் இன்னொரு மைல்கல்..!
- "பாக்கத்தான போறீங்க இந்த கோலியோட ஆட்டத்த".. செம்மா.. கோலியை பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்!
- ரோகித் ஷர்மா ஜெர்ஸி கலரும் ப்ளூ...காரோட கலரும் ப்ளூ! விலை எம்புட்டு தெரியுமா? வெறும் 3 கோடி தான்! அந்த வண்டி அப்படி என்ன ஸ்பெஷல் !
- "இப்டி இருந்தா 'வேர்ல்டு கப்' கிடைக்குறது கஷ்டம் பாஸ்.." இந்திய அணியில் உள்ள பெரிய குறை.. முன்னாள் வீரர் கொடுக்கும் வார்னிங்
- கோப்பையுடன் வேகமாக ஓடிய ரோஹித்.. "பிளேயர்ஸ் கிட்ட குடுக்காம என்ன பண்ணாரு தெரியுமா??.." வைரலாகும் விஷயம்
- நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே... சஞ்சு சாம்சன் செய்த தவறு! போட்டியின் நடுவே மைதானத்தில் கோபமடைந்த ரோகித் சர்மா!
- "ஜெயிச்சா மட்டும் போதாது பாத்துக்கோங்க.." ரோஹித், டிராவிட்டை கடுமையாக எச்சரித்த சுனில் கவாஸ்கர்.. பின்னணி என்ன?
- "நம்பர் 1 டீம் நீங்களே இப்டி பண்ணலாமா??.." திரும்ப திரும்ப இந்திய அணி செய்யும் தவறு.. விரக்தியில் கேப்டன் ரோஹித்
- மும்பை பிளேயருக்கு பதிலா.. 'சிஎஸ்கே' பையனுக்கு வாய்ப்பு.. வாசிம் ஜாஃபர் கொடுத்த 'ஐடியா'
- "உங்க 'Wife' இப்டி போட்டு குடுத்துட்டாங்களே கேப்டன் .." ரித்திகா போட்ட கமெண்ட்.. "நம்ம ரோஹித் செமயா மாட்டிக்கிட்டாரு"