"செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டி 20 தொடரையும், இந்திய அணி 3 -0 என கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்துள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளுக்கு வேண்டி, வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
இதில், ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த டி 20 தொடரின் இறுதி போட்டி, நேற்று நடைபெற்றிருந்தது.
போராடி தோல்வி
முதலில் பேட்டிங் செய்திருந்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ், 31 பந்துகளில், 7 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து பட்டையைக் கிளப்பியிருந்தார். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கடுமையாக போராடியும், கடைசியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தொடர் நாயகன் சூர்யகுமார்
இதனால், டி 20 தொடரையும் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி, பல சாதனைகளை படைத்துள்ளது. தொடர் மற்றும் ஆட்ட நாயகன் விருது ஆகிய இரண்டையும், சூர்யகுமார் தட்டிச் சென்றார். இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் ஷர்மா, ஒரு நாள் மற்றும் டி 20 என இரு தொடர்களிலும், அணியை அசத்தலாக வழிநடத்தி, தொடரைக் கைப்பற்ற காரணமாக இருந்துள்ளார்.
ரோஹித் முடிவுகள்
போட்டியின் போது, பவுலிங் ரொட்டேஷன் மற்றும் ஃபீல்டிங் என பலவற்றில், ரோஹித் எடுக்கும் முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது. அதே போல, 'DRS' முறையில் ரோஹித் கேட்ட ரிவியூக்கள், பெரும்பாலும் வெற்றியையே தேடிக் கொடுத்துள்ளன. இந்நிலையில், நேற்றைய கடைசி டி 20 போட்டியிலும், ரோஹித் DRS கேட்ட சம்பவம், அதிகம் வைரலாகி வருகிறது.
DRS அப்பீல்
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது, முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினர். பந்தை சந்தித்த கெயில் மேயர்ஸ் பேட்டில் பட்டு, நேராக கீப்பர் இஷான் கிஷான் கைக்குச் சென்றது. இந்திய அணியினர் அவுட் என கொண்டாட, போட்டி நடுவரோ அவுட் கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து, ரோஹித் ஷர்மா ரிவியூ செய்ததையடுத்து, மூன்றாம் நடுவர் முடிவில் அவுட் என்பது தெரிய வந்தது.
இதில், ரோஹித் சர்மா DRS கேட்ட விதம் தான், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எப்படியும் மூன்றாம் நடுவர் அவுட் தான் கொடுக்கப் போகிறார் என்பதை அறிந்து, போட்டி நடுவரின் முடிவை கேலி செய்யும் வகையில், கிண்டலாக ரோஹித் ஷர்மா அப்பீல் செய்தார்.
முடிவை எடுப்பதில், சிறந்த தலைமை பண்புடன் விளங்கும் ரோஹித்தின் இந்த செயலும், அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்??.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
- புவனேஷ்வர் செய்த தவறு.. கோபத்தில் பந்தை உதைத்து.. தீட்டித் தீர்த்த ரோஹித்.. காரணம் என்ன?
- ருத்ராஜ் கெய்க்வாட் ஏன் இந்திய அணில விளையாட விடமாட்றீங்க? ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், இஷான் கிசனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
- ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'
- இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!
- "கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்'ல.." ஒரே நேரத்தில் கடுப்பான ரோஹித், சாஹல்.. காரணம் என்ன?
- "நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு
- ஸ்ரேயாஸ் அய்யரை நேற்றய போட்டியில் சேர்க்காதது ஏன்? ரோஹித் சொன்ன பதில்..!
- ஜஸ்ட் மிஸ்: யுவராஜ் சிங் சாதனையை காலி பன்னிருப்பாரு.. அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
- குழப்பத்தில் இருந்த ரோஹித்.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வாய்ஸ்..!