கோப்பையை கையில் வாங்கியதும்.. நேராக வந்த ரோஹித் செய்த காரியம்.. கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் நேற்று முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி கண்டிருந்தது.

இதனால், மூன்றாவது போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது.

இதனிடையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், மூன்றாவது டி 20 போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். இருந்தாலும், நடுவே சில விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் குவிக்க ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம் கண்டது.

கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட், பந்தினை சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.

சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ரன்களும், கோலி 48 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் கோலி. அடுத்த பந்தில் கோலி அவுட்டாக, இன்னும் பரபரப்பு உருவானது. இறுதியில், இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட, ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியுடன் முடித்து வைத்தார் ஹர்திக் பாண்டியா.

இதனால், இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது. இந்நிலையில், தொடர் வென்றதற்கான கோப்பையை பெற்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்த விஷயம் தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கோப்பையை பெற்றதும் நேராக வீரர்களை நோக்கி வந்த ரோஹித், அதனை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கையில் கொடுத்தார். இதனை சற்று நெகிழ்வுடன் தினேஷ் கார்த்திக் பெற்றுக் கொண்ட நிலையில், பக்கத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா கோப்பையை உயர்த்திக் காட்டும் படி சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

முன்னதாக, இரண்டாவது டி 20 போட்டியில், சிக்ஸர், பவுண்டரி என அடித்த தினேஷ் கார்த்திக், இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "எங்க மக இன்னும் சாகல".. இறந்தும் 9 பேர் உயிரை காத்த மாணவி.. மனதை ரணமாக்கும் சோகம்.. உருக்க பின்னணி!!

CRICKET, ROHIT SHARMA, DINESH KARTHIK, TROPHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்