‘குவாரண்டைனுக்கு பிறகு’... ‘ஒருவழியாக இணைந்த ஹிட்மேன்’... ‘ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தையால்’... ‘நிகழ்ந்த சிரிப்பலை’... வைரலாகும் வீடியோ!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருவாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸால் இந்த ஆண்டு, ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. இதனால் பலத்த சர்ச்சை நிகழ்ந்தது.

இதையடுத்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டதால், அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்றார். பின்னர் காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மாவிற்கு, பிசிசிஐ சார்பில் உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையிலான குழு, ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கடந்த 11-ம் தேதி சான்று அளித்தது.

இதை அடுத்து ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சென்றார். அங்கு சிட்னி நகரில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார். 3-வது போட்டியில் ரோகித் சர்மாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஏற்கனவே தற்காலிக கேப்டன் சொன்ன நிலையில், சிட்னியில் இருந்து மெல்போர்னில் உள்ள இந்திய அணியினருடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டு யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் இந்திய அணியினர் ரோகித் சர்மாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். பின்னர், தனிமைப்படுத்துதல் எப்படி இருந்தது பிரண்ட் என ரோகித் சர்மாவிடம் கேட்கிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

மேலும் ‘நீங்கள் மிகவும் இளமையாக தோற்றம் அளிக்கிறீர்கள்’ என ரோஹித் சர்மாவிடம் கூறுகிறார். இதற்கு ஹிட்மேன் தலையசைத்துகொண்டே இல்லை என்பதுபோல் சிரிக்க, அப்போது அங்கே அருகே இருந்த ரகானே, உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் இதை ரசித்தபடி சிரித்தனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில், ஜனவரி 7-ம் தேதி தொடங்குகிறது. கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது. ஹனுமான் விஹாரி, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் உள்ளிட்ட இளம் வீரர்கள் துவக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் இருப்பதால், ஆடும் லெவனில் இடம்பெற்று ரோகித் சர்மா துவக்க வீரராக அதிரடியாக களம் இறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்