"இதுக்கு எல்லாமா அவுட்டு குடுக்குறது?".. கடுப்பான ரோஹித்.. அடுத்த கணமே கோபத்தில் செய்த பரபரப்பு காரியம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருந்தது. முதல் டெஸ்ட் போட்டியை போலவே இந்த போட்டியும் மிக விறுவிறுப்பாகவும் ஆரம்பமாகி உள்ளது.

                                  Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தது. ஆனால் நடுவே பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரே ஓவரில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர் விக்கெட்டை எடுக்க, போட்டியும் மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து அவுட், ஆக கடைசி கட்டத்தில் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். தொடர்ந்து கம்மின்ஸ் அவுட்டாகி வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்ததால் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடி இருந்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில் பேட்டிங் செய்த சமயத்தில் ரோஹித் சர்மா சற்று ஆவேசமாக டிஆர்எஸ் கேட்டது தொடர்பான விஷயம் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாளில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கி இருந்த சூழலில் தொடக்க விக்கெட்டுகளை எடுக்க ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டனர்.

அப்போது முதல் நாள் போட்டி முடிவு பெறும் சமயத்தில் நாதன் லைன் வீசிய பந்து ரோஹித் சர்மா பேடில் பட்டு செல்ல அவர் கேட்ச் ஆனதாகவும் ஆஸ்திரேலியா வீரர்கள் இணைந்து உடனடியாக இந்த விக்கெட்டிற்கு அப்பீல் செய்யவும் செய்திருந்தனர்.


Images are subject to © copyright to their respective owners

ஆனால் அது பேட்டில் படவில்லை என்பது தெளிவாக ரோஹித் சர்மாவுக்கு தெரியவே, அவர் மிகவும் உறுதியுடன், அதே வேளையில் நடுவர் அவுட் கொடுத்ததால் சற்று அதிருப்தியுடன் ஆவேசமாக கைகள் கொண்டு டிஆர்எஸ் கேட்டிருந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இறுதியில், டிஆர்எஸ் முடிவும் ரோஹித் அவுட்டில்லை என சாதகமாக வந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

 

ROHIT SHARMA, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்