"நம்பர் 1 டீம் நீங்களே இப்டி பண்ணலாமா??.." திரும்ப திரும்ப இந்திய அணி செய்யும் தவறு.. விரக்தியில் கேப்டன் ரோஹித்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி 20 போட்டியில், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

லக்னோ மைதானத்தில் நடைபெற்றிருந்த முதல் டி 20 போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் இஷான் கிஷான், நாலாபுறமும் பந்துகளை பறக்க விட்டு, வாண வேடிக்கை காட்டினார்.

இஷான் கிஷான் அதிரடி

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. 56 பந்துகள் சந்தித்த இஷான் கிஷான், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மற்றொரு பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரும் (28 பந்துகளில் 57 ரன்கள்) தனது பங்கிற்கு அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார்.

தொடர் வெற்றி

தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, ஒரு நாள் மற்றும் டி 20 அனைத்திலும் சேர்த்து 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.

அசத்தும் ரோஹித் ஷர்மா

தொடர்ந்து, தற்போது இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியையும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா, பல சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறார். மிக மிக அற்புதமாக அணியை வழிநடத்தி வரும் ரோஹித் ஷர்மா, அடுத்தடுத்து தொடர்களையும் வென்று வருவதால், உலக கோப்பையையும் இந்திய அணிக்காக கைப்பற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அணியின் பெரிய குறை

வெற்றி பயணத்தில் இந்திய அணி தொடர்ந்து கொண்டிருந்தாலும், அணியிலுள்ள ஒரு பெரிய குறையை பற்றி, நேற்றைய போட்டிக்கு பின் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது, மூன்று எளிய கேட்ச்களை தவற விட்டது. மூன்றாவது ஓவரில், வெங்கடேஷ் ஐயர் ஒரு கேட்ச் வாய்ப்பை தவற விட்டார்.

நெருக்கடி

தொடர்ந்து, அடுத்த சில ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு கேட்ச் வாய்ப்பினை நழுவ விட, இறுதியில் பும்ராவும் ஒரு கேட்ச் அவுட் வாய்ப்பை தவற விட்டிருந்தார். நம்பர் 1 டி 20 அணியான இந்தியா, இப்படி பல கேட்சுகளை தவற விடுவது, நிச்சயம் உலக கோப்பை தொடர் அல்லது சில முக்கிய போட்டிகளில், வெற்றி வாய்ப்பினை இழக்க வைக்கும் என்ற நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலை இருக்கு

இதனால் விரக்தி அடைந்த ரோஹித் ஷர்மா, 'நாங்கள் நிறைய கேட்ச்களை தவற விடுகிறோம். இப்படி ஒரு கட்டத்தில் நான் இதனை எதிர்பார்க்கவில்லை. எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு நிறைய வேலை உள்ளது. அவர் தான் இதனை சரி செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் சிறந்த ஃபீல்டிங் படை எங்களுக்கு தேவைப்படுகிறது' என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணியாக விளங்கினாலும், சில முக்கிய தவறுகளை சுட்டிக் காட்டி அதனை சரி செய்யும் வழியை அமைக்க பயிற்சியாளரை ரோஹித் ஷர்மா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ROHIT SHARMA, IND VS SL, SHREYAS IYER, ISHAN KISHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்