"கோலியோட ஃபார்முலாவை தான் ரோஹித்தும் பின்பற்றுகிறார்" - கேப்டன்சி பற்றி பேசிய கவுதம் காம்பீர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பார்முலாவை பின்பற்றுவதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயிலில் திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்.. பதட்டத்துல செல்போனை மறைக்க கைதி செஞ்ச காரியம்.. அதிர்ச்சி..!

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்று இருக்கிறது. இரு போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அதிகமிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசி இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உருவாக்கி வைத்திருந்த டெம்ப்ளேட்டை ரோஹித் சர்மா பின்பற்றி வருவதாக கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அவர் பேசுகையில், "ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கேப்டன்சி பொறுப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை தான் ரோகித்தும் பின்பற்றி வருகிறார். தனக்கென ஒரு பாணி கேப்டன்சியை ரோஹித் உருவாக்கவில்லை. இருவருடைய கேப்டன்சிக்கும் பெரிதான வித்தியாசங்களும் கிடையாது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை கோலி எப்படி பயன்படுத்தினாரோ அதே பாணியை தான் ரோகித் சர்மாவும் பின்பற்றுகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற ஓவர்சீஸ் தொடர்களுக்கு இந்திய அணி பயணம் செல்லும் போது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | உயிரை காப்பாத்திய இந்திய ராணுவ வீரர்கள்.. நன்றி சொல்ல திரண்ட துருக்கி மக்கள்.. உருக்கமான வீடியோ..!

CRICKET, ROHIT SHARMA, VIRAT KOHLI, GAMBHIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்