கையில காயத்தோட.. உள்ள வந்து கெத்து காட்டிய ரோஹித்.. "இப்டி ஒரு ரெக்கார்ட் வேற மனுஷன் பண்ணிட்டு போய்ட்டாரா?"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் இடையே தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதன் முதல் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றிருந்தது. கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் தேவை என்ற சூழலில் வங்காளதேச அணியினர் கடைசி விக்கெட்டிற்கு வெற்றி இலக்கை எட்டி, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையே இன்று (07.12.2022) இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், 7 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மஹ்முதுல்லா மற்றும் மெஹிதி ஹாசன் ஆகியோர் சிறப்பாக ஆடி 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்காளதேச அணியை மீட்டனர். மஹ்முதுல்லா 77 ரன்களும், மெஹிதி ஹாசன் 100 ரன்களும் எடுத்திருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்களை வங்காளதேச அணி சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்த போதும் கடைசி கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது.

காயம் காரணமாக பேட்டிங் செய்யாமல் இருந்த ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார். அவர் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த போதும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோஹித் ஷர்மாவால் அடுத்த பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது.

இதனால், இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வென்ற வங்காளதேச அணி, தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. ஆனால், அதே வேளையில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் செயல், தற்போது ரசிகர்கள் பாராட்டுக்களை பெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஃபீல்டிங் செய்த போது காயம் அடைந்த ரோஹித் ஷர்மா, போட்டியின் பாதியில் ரத்த காயத்துடன் விலகி இருந்தார். அவர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தொடக்க வீரராக கூட அவர் களமிறங்கவில்லை. அப்படி இருந்த போதும் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித், போட்டியை மிகவும் நெருக்கமாகவும் கொண்டு வந்திருந்தார். இதனால் அவரது செயலை எண்ணி ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.

அப்படி ஒரு சூழலில் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா செய்த சாதனை தொடர்பான செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த ரோஹித், மொத்தம் 3 சிக்ஸர்களை இந்த போட்டியில் பறக்க விட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்திய அணிக்காக மொத்தம் 500 சிக்ஸ்களை அடித்துள்ளார் ரோஹித் ஷர்மா. இந்திய அணி வீரர் ஒருவர் 500 சிக்ஸர்களை சர்வதேச போட்டியில் அடிப்பது இது தான் முதல் முறை. இவருக்கு முன்பாக க்றிஸ் கெயில் மொத்தம் 533 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் அவரது சாதனையையும் முறியடித்து முதலிடத்தையும் ரோஹித் ஷர்மா பிடிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்