VIDEO: இப்படி சொல்றதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்.. ‘ஹிட்மேன்’ செஞ்ச செயல்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். மும்பை அணியைப் பொறுத்தவரை பொல்லார்டு, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்ட்யா, ராகுல் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சௌரப் திவாரி 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், போட்டியின் 6-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா (Krunal Pandya) வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல் (Chris Gayle), ஸ்ட்ரைட் டிரைவ் திசையில் அடித்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் இருந்த கே.எல்.ராகுல் (KL Rahul) மீது பட்டுச் சென்றது.

உடனே க்ருணால் பாண்ட்யா பந்தை எடுத்து ரன் அவுட் செய்துவிட்டு அம்பயரிடம் அவுட் கேட்டார். அப்போது அருகில் இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட் கேட்க வேண்டாம் என கையால் சைகை காட்டினார். இதனை அடுத்து க்ருணால் பாண்ட்யாவும், அம்பயரிடம் அவுட் வேண்டாம் என கூறினார்.  உடனே ரோஹித் ஷர்மாவுக்கு கே.எல்.ராகுல் நன்றி தெரிவித்தார். ரோஹித் ஷர்மாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்