மரணமடைந்த செல்ல நாய்.. 50 அடிச்ச அப்புறம் ரோஹித் செஞ்ச உருக வைக்கும் செயல்.. கலங்கும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடைய செல்ல நாய் நேற்று மரணமடைந்திருக்கிறது. இதனிடையே நேற்றைய போட்டியில் அரை சதம் எடுத்த பிறகு ரோஹித் செய்த செயல் பலரையும் உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறது.
Also Read | யம்மாடி என்ன ஸ்பீடு.. உம்ரான் மாலிக்கின் தீயான பவுலிங்.. மொத்த ரெக்கார்டும் காலி..!
ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில்,"நேற்றைய தினம் எங்கள் வாழ்வில் மிகவும் கடினமான நாள். எங்கள் வாழ்வின் காதலுக்கு விடைகொடுத்தோம். நீ சிறந்த ஃபர்பேபியாக இருந்தாய். என் முதல் காதல், என் முதல் குழந்தை. நாம் மீண்டும் சந்திக்கும் வரையில் வாழ்க்கையில் மாயாஜாலங்கள் குறைந்துபோகும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்ததால், சிறப்பான ஸ்கோரை எட்டவும் வழி செய்திருந்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 87 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். துவக்க ஆட்டகக்காரர்களான ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இருப்பினும், 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தனது அரை சதத்தை பூர்த்தி செய்தவுடன் கண்களை மூடியபடி வான் நோக்கி பார்த்தபடி நின்றிருந்தார். இது ரசிகர்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பேசிவருவதுடன், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
Also Read | ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலி Century அடிப்பதற்கு முன் அஸ்வின் போட்ட ட்வீட்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த சூப்பர் சம்பவம்!!
- ரோஹித் ஷர்மாவை நேர்ல பார்த்ததும் கண்கலங்கிய குட்டி ரசிகர்.. கன்னத்தை கிள்ளி சமாதானப்படுத்திய ரோஹித்.. க்யூட் வீடியோ..!
- "சின்ன வயசுல என் பேட்டிங் நீங்க பாத்ததில்ல போல".. சூர்யகுமாரிடம் ஜாலியாக பேசிய டிராவிட்.. "மனுஷன் Fun பண்றாரே 😂"
- சஹால் வழி தனி வழி.. சூரிய குமார் யாதவின் பேட்டிங்கை பாத்துட்டு சஹால் செஞ்ச விஷயம்.. ட்ரெண்டாகும் வீடியோ..!
- தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
- "விராட் மாதிரி ஒரு பேட்ஸ்மேன்..".. உலகக்கோப்பை T20ல கோலி அடிச்ச சிக்ஸ்.. பல நாள் கழிச்சு மனம் திறந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ்..!
- 88 வருட வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு.. உனத்கட் படைத்த வரலாற்று சாதனை!!
- கார் விபத்தில் தன்னை காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் புகைப்படம்!!
- "நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!
- "விராட், ரோகித்தால மட்டும் உலக கோப்பைய ஜெயிக்கவே முடியாது".. ஸ்ட்ராங்கா கபில் தேவ் சொன்ன வார்த்தை!!