தொடரின் முதல் டெஸ்டிலேயே சதமடிச்சு அசத்திய ரோஹித்.. அடுத்த கணமே படைத்த உலக சாதனை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் விறுவிறுப்பாக நடந்தது.

Advertising
>
Advertising

Also Read | "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. 35 வருட காதல் மனைவிக்காக பைக்கில் கணவர் ஒட்டிய ஸ்டிக்கர்!!

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது போலவே இரண்டாவது நாளிலும் சிறப்பாக ஆடி இருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமாகி இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பியிருந்தார்.

தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக அடி 120 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, தனியாளாக நின்று சூப்பராக ஆடி இருந்தார் ரோஹித். இந்திய அணி தற்போது 100 ரன்களுக்கு மேல் முன்னிலையும் வகிக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் போட்டியின் முடிவு குறித்தும் தற்போதே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்ததன் மூலம் படைத்துள்ள சாதனை ஒன்று பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக சதம் அடிக்காமல் இருந்து வந்த ரோஹித் ஷர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதமடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்ததால் அவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அப்படி இருக்கையில் சிறப்பான சாதனை ஒன்றையும் ரோஹித் சர்மா தற்போது படைத்துள்ளார். அதாவது டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா வசமாக்கி உள்ளார். சர்வதேச அளவில் தில்ஷன் (இலங்கை), பாப் டு பிளெஸ்ஸிஸ் (தென்னாப்பிரிக்கா), பாபர் அசாம் (பாகிஸ்தான்) ஆகிய 3 பேரும் கேப்டன்களாக இருந்த போது மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் ரோஹித் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல கேப்டனாகவும், ஒரு வீரராக அணியில் இருக்கும் போதும் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்துள்ள முதல் வீரர் என்ற பெருமையும் ரோஹித் வசம் மட்டும் தான் உள்ளது.

Also Read | "எப்புட்றா.." வெறும் பத்தே செகண்ட்ல உணவு டெலிவரி! எப்படி சாத்தியமாச்சு.? வியக்கும் நெட்டிசன்கள்

CRICKET, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்