'அவரு பேட்டிங் பண்ண வர்றது...' 'மனைவிய பீச்சுக்கு கூட்டிட்டு போற மாதிரி இருக்கு...' - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் மூன்று முடிந்துள்ளது. இந்த நிலையில் பிட்ச் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளது. பிட்ச் விவாகரம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசினார், அப்போது ரோஹித் ஷர்மா பேட் செய்ய வரும்போது ஏதோ தன் மனைவையையும் குழந்தையையும் பீச்சுக்குக் கூட்டிச் செல்வது போல் ரிலாக்ஸாக வருவதாக கூறினார்.
சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது, சீரான பந்துகள் மோசமாக வரும் பிட்ச் இல்லை இது. பந்துகள் பயங்கரமாக ஆட முடியாத அளவுக்கு எழும்பவில்லை. அதே போல் பந்து கணுக்காலுக்குக் கீழ் செல்லும் நிலைமையும் இல்லை. இங்கு பவுன்ஸ் உண்மையாகத்தான் இருந்தது. ஆம், ஸ்பின் இருந்தது, மறுக்கவில்லை, ஆனால் பேட்ஸ்மென்கள் திரும்பும் பந்துகளையும் நேராக வரும் பந்துகளையும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சவாலான பிட்ச்தான் என்றாலும் வெறுப்பூட்டும் அளவுக்கு பெரிய சவால் அல்ல. ஆட்டமிழந்ததைப் பார்த்தால் இருதரப்பு பேட்ஸ்மேன்களுமே தவறு செய்து ஆட்டமிழந்தார்கள் என்பது தான் உண்மை.
இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் இந்தப் பிட்ச்சில் பேட் செய்ய முடியும் என்பதைக் காட்டியுள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் தொய்ந்து போன உடல் மொழிதான் ஏமாற்றமளிக்கிறது. குறைந்தது இரண்டு இந்திய வீரர்களின் உடல் மொழி அதற்கு நேர் எதிராக இருந்தது.
மேலும், ரோஹித் சர்மா பேட் செய்ய வரும்போது ஏதோ தன் மனைவையையும் குழந்தையையும் பீச்சுக்குக் கூட்டிச் செல்வது போல் ரிலாக்ஸாக இறங்குகிறார்.
அதே போல் விராட் கோலி தவறு செய்த ஒருவனைக் கைது செய்ய வரும் போலீஸ் போல் இறங்குகிறார். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் களைப்புடன் இறங்குகின்றனர். ஆனால் ஜோ ரூட் பேட்டிங் அப்படி அல்ல.
நிதானமான விமர்சனங்களைப் பார்த்தால் நமக்கு சில தீவிர விமர்சனங்கள் நியாயமற்றதாகவே தெரிகிறது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை...' 'விளையாட்டுன்னா அத பத்தி மட்டும் கமெண்ட்ரி பண்ணுங்க...' - கடுப்பான வீரர்...!
- 'உன்ன ஏன் இன்னும் டீம்ல சேர்க்கலன்னு கேட்பாங்க...' 'என்கிட்ட அப்போ பதில் இல்ல...' 'பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா...' - நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த இந்திய வீரர்...!
- 'இப்போ தான ஒருத்தர் ஓய்வு அறிவிச்சாரு...' 'அதுக்குள்ள இன்னொருத்தரா...' 'அவர தோளில சுமந்து நடந்தது மறக்கவே முடியாது... நெகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் வீரர்...!
- "பல வருஷமா 'கிரிக்கெட்'ன்னு ஓடிட்டு இருந்தேன்... இப்போ அதுல இருந்து 'ரெஸ்ட்' எடுத்துக்கப் போறேன்..." 'இந்திய' வீரரின் அறிவிப்பால்... உருகிய 'ரசிகர்கள்'!!
- 'கிரவுண்ட் சரி இல்லங்க...' பிட்ச் ரெடி பண்ணவங்கள காப்பாத்த கோலி இப்படி பேசுறாரா...?! - இங்கிலாந்து அணி கடும் விமர்சனம்...!
- ‘3 ஓவர், 3 விக்கெட், ஒரு ரன் கூட போகல’!.. இந்திய பேட்டிங் ஆர்டரை ‘சுக்குச்சுக்கா’ நொறுக்கிய வீரர்..!
- 'மன உளைச்சலா இருக்கு...' நாங்க ஃபீல்டிங் பண்றப்போ மட்டும் 'அப்படி' பண்றாங்க...! - தேர்ட் அம்பயர் மேல் கடும் விரக்தியில் இங்கிலாந்து அணி...!
- பாஜகவில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. பரபரக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்..!
- 'நானும் அவரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்...' 'ஸோ நான் அதெல்லாம் பெரிய விஷயமாவே நெனைக்கல...' - விராட் கோலி கருத்து...!
- மம்தா பானர்ஜியின் கட்சியில் இணைந்த ‘பிரபல’ கிரிக்கெட் வீரர்.. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறக்க திட்டமா..?