கட்டம் கட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா.. கூடவே கோலியும் போட்ட 'ஸ்கெட்ச்' பக்கா.. குழம்பி நின்ற பேட்ஸ்மேன்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் மோதவுள்ளது.
இதன் முதல் ஒரு நாள் போட்டி, இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்றிருந்தது. தென்னாப்பிரிக்க தொடரில், காயம் காரணமாக விலகியிருந்த ரோஹித் ஷர்மா, தற்போது குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கினார்.
சிக்கித் திணறிய வெஸ்ட் இண்டீஸ்
அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா, களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், ரன் அடிக்க முடியாமல் திணறியது. இதனால், 176 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது.
கேப்டன் ரோஹித் ஷர்மா
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 28 ஆவது ஓவரில், 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் 1000 ஆவது ஒரு நாள் போட்டியில் தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மா, தன்னுடைய முதல் கேப்டன்சியிலேயே, அணி வீரர்களை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்.
ரோஹித் - கோலி
இதற்கு முன்பு, கேப்டனாக இருந்த கோலியுடன் இணைந்து, ரோஹித் எடுத்த பல முடிவுகள், இந்திய அணிக்கு பெரிய நன்மையாக அமைந்தது. அது மட்டுமில்லாமல், ரோஹித் தலைமை பண்பை பலரும் பாராட்டியும் வருகின்றனர். இந்நிலையில், ரோஹித் கேப்டன்சி திறனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம், நேற்றைய போட்டியில் நிகழ்ந்தது.
ஃபீல்டிங் செயல்பாடு
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதன் முதல் பந்தில், டேரன் பிராவோ சிங்கிள் எடுத்தார். அப்போது, ஸ்கொயர் லெக் திசையில் யாரும் ஃபீல்டிங் செய்யவில்லை. தொடர்ந்து, 2 ஆவது பந்தை வாஷிங்டன் சுந்தர் வீசுவதற்கு முன்பாக, மிட் விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் பகுதியில் இரண்டு ஃபீல்டர்களை ரோஹித் ஷர்மா நிறுத்தினார்.
சிறப்பான விக்கெட்
இந்த சமயத்தில், வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங், பேட்டிங் பக்கம் நின்றார். அதே போல, வாஷிங்டன் சுந்தரிடம் ஸ்லோ பால் போடச் சொல்லியுள்ளார் ரோஹித் ஷர்மா. அவரும் அப்படியே செய்ய, பந்தினை எதிர்கொண்ட ப்ரெண்டன் கிங் எதிர்பார்த்ததை விட, பந்து மெதுவாக வந்தது. இதனால், அவர் டைமிங்கை தவற விட, பேட்டில் சரியாக படாமல், மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆக மாறியது.
தக்க பதிலடி
இதனால், பேட்ஸ்மேன் திகைத்து போய் விட்டார். ரோஹித் சரியாக கட்டம் கட்டி, விக்கெட் விழ வைத்ததற்கு, கோலியும் பீல்ட் செட்டிங்கில் அதிகம் உதவி செய்துள்ளார். அதே போல, இருவரும், பல முறை பீல்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு, சிறப்பாக செட் செய்து ஆடினர்.
ரோஹித் - கோலி இடையே மோதல் இருப்பதாக அதிகம் வதந்தி பரவி வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே போட்டி, அப்படி எதுவுமே இருவருக்குள்ளும் இல்லை என்பதை உறுதி செய்து, வதந்தி பரப்பியவர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பொல்லார்ட்' வந்ததும் 'கோலி' சொன்ன ரகசியம்.. மறுகணமே மைதானத்தில் நடந்த 'மேஜிக்'.. "வேற லெவல்யா கிங் கோலி"
- VIDEO: அட்வைஸ் பண்ண வந்த கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்..? சர்ச்சையை கிளப்பிய போட்டோ.. உண்மை என்ன..?
- VIDEO: யாருங்க சொன்னது ரெண்டு பேருக்கும் சண்டைன்னு.. இந்த வீடியோ பாருங்க தெரியும்..!
- VIDEO: கேட்கவா, வேண்டாமா..? குழம்பி நின்ற ரோகித்.. வேகமாக ஓடி வந்த கோலி.. முதல் மேட்சே ‘வேறலெவல்’ சம்பவம்..!
- கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் .. '4 அல்ல 41 பேர் பலி'.. தப்பிக்க சீனா ராணுவத்தினர் செய்த பகீர்.. வெளியான தகவல்
- "தோனி, கோலி கிட்ட கரெக்ட்டா இருந்த ஒரு விஷயம்.. ரோஹித் கிட்ட சுத்தமா மிஸ்ஸிங்.." புதிய கேப்டனுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்
- வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல
- "தோனி கூட ஆடுறப்பவே இப்டி தான் நாங்க இருந்தோம்.." கேப்டன் பதவி விலகல்.. Virat Kohli ஓபன் டாக்
- ராகுலை வைத்து இந்திய அணி பெருசா போட்ட பிளான்??.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே கிரிக்கெட் பிரபலம்
- கேப்டன் ரோஹித் ஷர்மா.. இப்டி ஒரு சிக்கல்'ல மாட்டிகிட்டாரே??.. சுத்தி ரிஸ்க்.. எப்படி தான் சமாளிக்க போறாரோ?