‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 25 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 7 ரன்களில் அவுட் ஆக ரோஹித் ஷர்மாவும், புஜாராவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 சிக்சர்கள், 2வது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் என மொத்தமாக 13 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சித்துவின் (8 சிக்ஸர்கள்) 25 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும் இந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்துள்ள ரோஹித் ஷர்மா ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்துள்ள இந்திய வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
- ‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..!
- ‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..!
- ‘எந்த கிரிக்கெட் அகாடமியும் சேத்துக்கல’ ‘அதான் மகளோட முடிய வெட்டி மகன்னு சொல்லி சேத்தேன்’..!
- ‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..!
- ‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’!
- ‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..!
- இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடிய தமிழக வீரர்..! முதல் டெஸ்ட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!
- ‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..!
- ‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..!