கோலியை விட ரோகித் தான் பெஸ்ட் கேப்டன்" - சர்ச்சையை கிளப்பிய முன்னாள் இந்திய வீரர் கருத்து

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், விராத் கோலி - ரோகித் ஷர்மாவை ஒப்பிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி வெளியேறியதை அடுத்து இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்மா, சமீபத்திய தொடரில் இலங்கையை 2-0 என ஒயிட் வாஷ் செய்து தனது பதவிக்காலத்தை ஒரு நல்ல நிலையில் தொடங்கி உள்ளார். 

மறுபுறம், கோஹ்லி மிகவும் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக இருக்கிறார், அவரது தலைமையில் 68 டெஸ்டில் 40 வெற்றிகளை பெற்று 59% என்ற வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். 2014-15 ஆம் ஆண்டில் MS தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பேற்றார். அந்த சீசனில் ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல்முறையாக கேப்டனாக கோலி செயல்பட்டார்.

இந்நிலையில் ரோஹித் தான் கோஹ்லிக்கு சரியான போட்டியாளர் என்று ஜாஃபர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு ரோஹித் சர்மாவால் முன்னேற முடியும் என்று ஜாபர் கூறியுள்ளார். 

மேலும்,"விராட் கோலியை விட ரோஹித் சர்மாவால் சிறந்த டெஸ்ட் கேப்டனாக முடியும். அவர் எத்தனை டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருப்பார் என்று தெரியவில்லை, ஆனால் தந்திரோபாயமாக அவர் சிறந்த கேப்டன்களில் ஒருவராக நான் உணர்கிறேன், இந்த தொடரை அவர் எப்படி ஒயிட்வாஷ் செய்தார் என்பதை நாம் காண்கிறோம். கேப்டன் பதவி சரியான கேப்டனின் கைக்கு வந்தது போல் உணர்கிறேன்” என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்