"சோதனை மேல் சோதனை.." ரோஹித்தின் மோசமான சாதனை.. "ஐபிஎல் மேட்ச்'ல யாரும் இப்டி பண்ணதில்ல"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில், புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தற்போது மோதி வருகிறது.

Advertising
>
Advertising

கடைசி இடத்தில் இருக்கும் அணிகள் என்றாலும், மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி என்றாலே, முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு விருந்தாக தான் இருக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது போன்ற உணர்வை ஐபிஎல் போட்டிகளில் தர முடியும் என்றால், அது மும்பை Vs சென்னை அணி மோதும் போது தான்.

மும்பை செட் செய்த இலக்கு

அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தங்களின் முதல் லீக் போட்டியில் தற்போது மோதி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் திலக் வர்மா அரை சதமடிக்க, மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் வேகமாக சில பவுண்டரிகளை அடித்திருந்தார்.

இருபது ஓவர்கள் முடிவில், மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி தற்போது ஆடி வரும் சிஎஸ்கேவும் தொடக்க விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் ஒரு மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

ரோஹித் பண்ண மோசமான சாதனை

மும்பை அணி பேட்டிங் செய்த போது, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல், டக் அவுட்டாகி  இருந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மந்தீப் சிங், பார்த்தீவ் படேல் என அனைவரும் 13 முறை டக் அவுட்டுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரோஹித் ஷர்மா, 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதும், அதிக விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு.. https://www.behindwoods.com/bgm8/

ROHIT SHARMA, CSK, IPL 2022, CSK VS MI, ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்