"பிரச்சனையே உங்களால தான்.. நீங்க வாய மூடுனா மட்டும் போதும்".. கோலி விவகாரத்தில் பொறுமை இழந்த ரோஹித் ஷர்மா

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை, 0 - 3 என்ற கணக்கில் இழந்தது.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி, நாளை நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்திய அணியின் 50 ஓவர் மற்றும் டி 20 அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி, இந்திய அணி அசத்தியுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா

இதில், சிறப்பாக அணியைத் தலைமை தாங்கி, அற்புதமாக வழி நடத்திய ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. தொடர்ந்து, டி 20 போட்டிகளிலும், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஒரு நாள் தொடரில், தோல்வி அடைந்தாலும், டி 20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

விராட் கோலி மீது விமர்சனம்

இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று அசத்தியிருந்தது. ஒரு நாள் போட்டியை விட, அதிக பலத்துடன் இந்திய அணி தயாராக வேண்டிய சூழலும் உள்ளது. இதனிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சுமார் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் சேர்த்து, 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் கோலி. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு நாள் தொடர் ஒன்றில், 50 ரன்கள் குறைவாக விராட் கோலி குவித்தது, இந்த தொடரில் தான். அது போக, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் கோலி இருந்து வருகிறார். பல போட்டிகளில், 50 ரன்களுக்கு மேல் அடித்தாலும், அதனை நூறாக கோலியால் மாற்ற முடியவில்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு

இது குறித்து, அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது. அதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரிலாவது, சிறந்த இன்னிங்ஸினை கோலி வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், டி 20 தொடருக்கு முன்பாக, பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கலந்து கொண்டார்.

நீங்க வாயை மூடுங்க

அப்போது, அவரிடம் 'கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, 'நீங்கள் (செய்தி ஊடகங்கள்) இது பற்றி பேசாமல், சிறிது காலம் அமைதியாக இருந்தாலே, கோலி பழைய ஃபார்முக்கு வந்து விடுவார் என நான் நினைக்கிறேன்.

அவர் சிறந்த மனநிலையில் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் சர்வதேச அணியில் இருக்கிறார். நெருக்கடியான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

எனவே, இது எல்லாம் உங்களிடம் இருந்து ஆரம்பமாகிறது என நான் நினைக்கிறேன். நீங்கள் சற்று அமைதியாக இருந்தால் போதும். எல்லாம் தானாக சரியாகி விடும்' என கோலி குறித்த விமர்சனத்திற்கு, ரோஹித் ஷர்மா தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

VIRAT KOHLI, ROHIT SHARMA, IND VS WI, விராட் கோலி, ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்