மோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட டி20 அணியினை பிசிசிஐ சற்றுமுன் அறிவித்து உள்ளது. இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மீண்டும் கழட்டி விடப்பட்டுள்ளார். இதனால் கொந்தளித்த ரசிகர்கள் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு திறமையான வீரருக்கு ஏன் வாய்ப்பு அளிக்க மறுக்கிறீர்கள்? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுதவிர கோலி தான் சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு முக்கிய காரணம் என்றும், ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். கோலி மட்டுமின்றி பிசிசிஐ குழுவையும் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் #SanjuSamson தற்போது ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறார்.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். தான் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சஞ்சு 2-வது பந்தில் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். எனினும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். இந்தநிலையில் சஞ்சு சாம்சன் மீண்டும் கழட்டி விடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி:

1. விராட் கோலி (கேப்டன்) 2. ரோஹித் சர்மா( துணை கேப்டன்) 3. கே.எல்.ராகுல் 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. மனிஷ் பாண்டே 6. ஷிகர் தவான் 7. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) 8. நவ்தீப் சைனி 9. சிவம் துபே 10. குல்தீப் யாதவ் 11. யஷ்வேந்திர சாஹல் 12. வாஷிங்டன் சுந்தர் 13. ஜஸ்பிரிட் பும்ரா 14. மொஹம்மது ஷமி 15. ரவீந்திர ஜடேஜா 16. ஷர்துல் தாகூர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்