"நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3 -0 என்ற கணக்கில், இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையேயான டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

ஸ்ரேயாஸ் அய்யரை நேற்றய போட்டியில் சேர்க்காதது ஏன்? ரோஹித் சொன்ன பதில்..!

இதன் முதல் போட்டி, நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக, நிகோலஸ் பூரன் 61 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்திய அணி வெற்றி

19 பந்துகளில், 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து, ரோஹித் அவுட்டானார். நடுவே சில விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதியில், சூர்யகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் அதிரடி காட்ட, 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டி, இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.

ரவி பிஷ்னோய்

இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இளம் வீரர் ரவி பிஷ்னோய், 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். மேலும், அவர் ஆட்ட நாயகன் விருதினையும், அறிமுக போட்டியிலேயே வென்று சாதனை புரிந்துள்ளார். டி 20 தொடரையும், வெற்றியுடன் தொடங்கியுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணியினருக்கு, ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மைக் ஆடியோ

இதனிடையே, போட்டிக்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா எரிச்சலடைந்த வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சமீப தொடர்களில், இந்திய அணி வீரர்கள் பேசும் விஷயம், ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி அதிகம் வைரலாகும். அதில் சில விஷயங்கள் வேடிக்கையாகவும், மற்ற சில விஷயங்கள் , கோபத்தில் பேசும் கருத்துக்களாகவும் இருக்கும்.

நடுவரால் எரிச்சல்

அந்த வகையில், நேற்றைய போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேஷுக்கு, ரவி பிஷ்னோய் பந்து வீசினார். அப்போது, பேட் அருகே சென்ற பந்து, கீப்பர் கைக்குச் சென்றது. பந்து பேட்டில் பட்டதாக, ரவி அவுட்டிற்கு வேண்டி அப்பீல் செய்தார். ஆனால், போட்டி நடுவரோ, உடனடியாக வைடு என அறிவித்தார். வைடு என நடுவர் சொன்னதால், எரிச்சல் அடைந்த ரோஹித், 'இதனை எப்படி வைடு என அவர் கூறுகிறார்?' என கடுப்பில் கேட்டார்.

சரியாக சொன்ன ரோஹித்

தொடர்ந்து, அவுட்டா என்பது ரிவியூ செய்யப்பட்ட போது, சேஷ் அவுட்டில்லை என்பது தெரிந்தது. அதே போல, பந்து பேடில் பட்டு சென்றதும், வைடு இல்லை என்பது தெரிய வந்தது. ரோஹித் முன்பு தெரிவித்தது போலவே, நடுவர் தவறாக வைடு என அறிவிக்கப்பட்டதும், ரிவியூவிற்கு பிறகு தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்ட் மிஸ்: யுவராஜ் சிங் சாதனையை காலி பன்னிருப்பாரு.. அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

ROHIT SHARMA, UMPIRE DECISION, T20 MATCH, வெஸ்ட் இண்டீஸ், ரவி பிஷ்னோய், ரோஹித்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்