"'ரோஹித்'துக்கு ஒரு நியாயம்... 'அந்த' பிளேயருக்கு ஒரு நியாயமா??..." மீண்டும் 'கொதித்து' எழுந்த 'ரசிகர்'கள்... பரபரப்பு 'பின்னணி'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே ரோஹித் ஷர்மாவிற்கு இடம் கிடைத்துள்ள நிலையில், தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தான் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது காயம் காரணமாக மும்பை அணிக்காக சில போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடாமல் இருந்த நிலையில், அவரது பெயர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை.
ஆனால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அவர் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்கியது, பிசிசிஐ மீது கேள்விகளை அடுக்கித் தள்ளியது. அதே போல, ரோஹித் ஷர்மாவை ஓரம்கட்ட வேண்டி இந்திய அணி கேப்டன் விராட் கோலி வேண்டுமென்றே இப்படி செய்தார் என ரோஹித் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதனையடுத்து, ரோஹித்திற்கு டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்தது. ஐபிஎல் முடிவடைந்த போது, அவர் 70 சதவீதம் மட்டுமே உடற்தகுதியுடன் இருந்ததால் அவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உடற்தகுதியை முன்னேற்றி வந்தார்.
ஆனால், இன்னும் முழுமையாக ரோஹித் உடற்தகுதி பெறவில்லை என கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோஹித் டிசம்பர் மாதம் தான் ஆஸ்திரேலியா செல்ல முடியும். அதன் பின்னர் அவர் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பின் அங்குள்ள குவாரன்டைன் விதிமுறைகள் காரணமாக அவரால் முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது.
ஒரு பக்கம் நிலைமை இப்படி இருக்கையில், மறுபக்கம் ரோஹித் ஷர்மாவை விட அதிகம் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த விருத்திமான் சஹா, டெஸ்ட் போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார். அவருக்கு இரண்டு இடங்களில் தசை பிடிப்பு இருந்த போதும், அவர் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கேயே அவர் உடற்தகுதியை நிரூபித்து டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராக உள்ளார். அவரை விட குறைவாக காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் ஷர்மாவை ஏன் நேரடியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்லவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காயம் ஏற்பட்ட இரண்டு வீரர்களை ஏன் இரண்டு விதமாக பிசிசிஐ பார்க்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே ரோஹித் - பிசிசிஐ விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக எந்த தகவலும் தெரியாமல் இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் கேள்விகளையும், பரபரப்பையும் உண்டு பண்ணியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மத்த டீம்ல Familyகே அனுமதி இல்லாதப்போ'... 'BCCIஐ மிரள செய்த அணி!!!'... 'லிஸ்ட்டுலயே இதுதான் உச்சகட்டம்!!!'... 'தொடருக்குப்பின் கசிந்த தகவல்!'...
- ‘ஹிட்மேன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக’... ‘டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக’... ‘ இந்த இளம் வீரருக்கு’... ‘அடிக்கப்போகும் சான்ஸ்’???...
- "இனிமே 'மேட்ச்' நடக்குறப்போ 'அந்த' விஷயத்த பண்ணமாட்டேன்... எனக்கு தான் வயசாயிடுச்சுல்ல ... " அட நம்ம 'வார்னரா' இப்டி சொன்னது?!!!.."
- 'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...
- ‘இரண்டு சீனியர் வீரர்களும்’... ‘டெஸ்ட் தொடரில் பங்கேற்க போவதில்லை?’... ‘வெளியான தகவல்’...!!!
- யார் சிறந்த 'கேப்டன்'??... கோலி - ரோஹித் விவகாரத்தில்... மேலும் 'பரபரப்பை' ஏற்படுத்திய கம்பீரின் 'பேச்சு'!!!
- ‘இந்திய அணி நிர்வாகம்’... ‘எந்த ஆர்டரில் இறக்கினாலும் சரி’... ‘பேட்டிங் செய்ய தயார்’... ‘அதிரடியாக கூறிய சீனியர் வீரர்’...!!!
- இன்னும் 5 நாள்தான்.. ரோஹித் மட்டுமில்ல அவரும்தான்.. ‘செக்’ வைத்த ரவிசாஸ்திரி..!
- "இது தரமான பதிலடி..." ரோஹித்தை 'கிண்டல்' செய்த பிராட் ஹாகை... ஒரே ஒரு 'மீம்' வைத்தே செஞ்சு விட்ட இந்திய முன்னாள் 'வீரர்'!!!
- ‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!