"நாளைக்கு 'மேட்ச்'ல இந்த ரெண்டு பேர் தான் 'ஓப்பனிங்'..." கன்ஃபார்ம் செய்த 'கோலி'... வேற 'லெவல்' வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களம் இறங்குவார்கள் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அகமதாபாத்திலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளது. டி-20 தொடர் நாளை முதல் (12-03-2021) தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது,

ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறார்கள். மூன்றாவது தொடக்க வீரராக ஷிகர் தவன் உள்ளார். இந்த டி-20 தொடரில் ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.  இந்தத் தொடரிலிருந்து நாங்கள் இயல்பாக விளையாட இருக்கிறோம்.

                                          

டி-20 உலகக் கோப்பையை வெல்லும் அணி என இந்தியாவை உறுதியாக கூற முடியாது. இங்கிலாந்தைக் கூறலாம். அவர்கள்தான் உலகின் நம்பர் 1 அணி ஆகும். அவர்களுடைய பலத்தை அனைத்து அணிகளும் அறிவார்கள்.

                                           

அணியில் அஸ்வினைச் சேர்ப்பது குறித்துக் கேட்கிறீர்கள். வாஷிங்டன் சுந்தர் நன்றாகப் பந்து வீசுகிறார். ஒரேமாதிரியான இரு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்வது கடினம் தான். ஒருவேளை, வாஷிங்டன் சுந்தர் மோசமாக பந்து வீசினால் அது சாத்தியம். 

                                         

மேலும், புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் மற்படியும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளில் பங்களிக்க அவர் ஆர்வமாக உள்ளார்' இவ்வாறு இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்