இந்திய அணிக்கு வந்த அடுத்த ‘தலைவலி’.. தீயாய் பரவும் ஹோட்டல் ‘பில்’.. இதெல்லாம் சாப்பிட்டாங்களா..? புது சர்ச்சையில் சிக்கும் ரோஹித்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் ஷர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி புத்தாண்டை கொண்டாட உணவகம் சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இதனை அடுத்து வரும் வியாழக்கிழமை 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி மற்றும் பிருத்வி ஷா என ஐந்து வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக அங்குள்ள உணவகம் ஒன்றில் ஐந்து வீரர்களும் சாப்பிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படும் உணவுகளுக்கான ரசீது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், இறால், பன்றி இறைச்சி, சிக்கன் மற்றும் பீப் சாப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய நாட்டில் மருத்துவ பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி போன்ற வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்த பின்பு கூட அவர்களை உடனே அணியில் சேர்க்கவில்லை. 14 நாட்கள் தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பிறகே அணியில் சேர்த்தனர். அதேபோல் ரோஹித் ஷர்மாவின் தனிமை முகாமிற்கான நாட்களை குறைக்க வேண்டுகோள் விடுத்தபோதும் நிராகரிக்கப்பட்டது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போதுதான் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இளம்வீரர்களுடன் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உணவகத்துக்கு சென்ற சம்பவத்தை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்