"ஒரு விஷயத்துல தெளிவா முடிவு எடுத்துட்டோம்.." கட்டம் கட்டி தயாராகும் இந்திய அணி.. ரோஹித் ஷர்மா சொன்ன அதிரடி 'பிளான்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி ஆடி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | விட்டு விட்டு எரியும் லைட்.. தோன்றி மறையும் உருவம்.. பீதியை கிளப்பும் இளம்பெண் 'வீடு'!!.. "உள்ள போகவே கால் நடுங்குமாம்"..

இதில் முதலாவதாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த டி20 தொடரையும் 4 -1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருந்தது.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக, டி 20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்றிருந்த இந்திய அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களிலும் அசத்தலாக அடி வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது. அதே போல, பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இந்திய அணி ஆடவுள்ளதால், இருநாட்டு ரசிகர்களுக்கும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வென்றிருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி குறித்த அசத்தல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இயங்கி வரும் ரோஹித் ஷர்மா, ஏராளமான டி 20 தொடர்களை வென்று, பல சாதனைகளை புரிய உதவியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பேசிய ரோஹித் ஷர்மா, "கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியதில் இருந்து ஒரு விஷயத்தில் தெளிவாக முடிவெடுத்து விட்டோம். நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்ற அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அணி எங்கே முன்னேற முயற்சிக்கிறது என்பது பற்றிய செய்தி, கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமிருந்து தெளிவாக சென்றால், அணியில் உள்ள தனிநபர்கள் நிச்சயம் அதனை செய்ய முயற்சிப்பார்கள். அதனை நடத்துவதற்கு அனைத்து வீரர்களுக்கு சுதந்திரமும், தெளிவும் தேவை. இதனால் முடிந்த அளவு அணியில் உள்ள அனைவருக்கும் முழு சுதந்திரத்தை கொடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே, இந்திய அணியில் தற்போது பல இளம் வீரர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி சுதந்திரமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ரெய்னா ஆடுற மேட்ச்'னா மிஸ் பண்ணாம கிரவுண்ட்'ல ஆஜர் ஆயிடுவாரு.." வெறித்தமான ரசிகருக்கு நேர்ந்த துயரம்.. மனம் உடைந்த சின்ன 'தல'!!

CRICKET, ROHIT SHARMA, INDIA TEAM, ASIA CUP 2022, ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்