VIDEO: ‘யோவ்.. இந்தாய்யா...!’.. கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த ‘அல்டிமேட்’ ரியாக்ஷன்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மைதானத்தில் செய்த குறும்பு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனை அடுத்து நேற்றைய ஆட்டமும் மழையால் தாமதமாகவே தொடங்கியது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இதனால் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் நியூஸிலாந்து வீரர்கள் சற்று திணறினர். இதன்காரணமாக அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து இழந்தது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி, ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ரோஹித் ஷர்மா குறும்பாக அவரை திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நியூசிலாந்த வெறுப்பேத்துங்க'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற... இந்திய அணிக்கு 'எமோஷனல் அட்வைஸ்' கொடுத்த முன்னாள் வீரர்!
- 'இந்திய அணிய இதுக்கு மேல மோசமா கழுவி ஊத்த முடியாது'!.. வாய வச்சுட்டு சும்மா இல்லாம... ரசிகர்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிய வாகன்!
- WTC final: ‘மழையால் அடுத்தடுத்து கைவிடப்படும் போட்டி’.. ரசிகர்களுக்கு ‘சிறப்பு’ சலுகை.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!
- ஒருவேளை மேட்ச் டிரா ஆனா யார் ‘வின்னர்’-னு எப்படி முடிவு பண்றது..? ஐசிசிக்கு கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு..? கேள்விக்கு ‘நச்’ என்று அஸ்வின் சொன்ன பதில்..!
- வாக்கி டாக்கியில சிராஜ் அப்படி என்ன பேசியிருப்பாரு..? சிக்கிய ஒரே ஒரு போட்டோ.. வகை வகையாக ‘மீம்ஸ்’ போட்ட நெட்டிசன்கள்..!
- ‘அவர் இந்திய அணிக்கு கிடச்ச வரம்’!.. கொஞ்சம் அவரோட ‘ரெக்கார்ட்’-ஐ எடுத்துப் பாருங்க.. தமிழக வீரரை தாறுமாறாக புகழ்ந்த பும்ரா..!
- 'இந்திய அணியில் ஒரு இங்கிலாந்து தாதா'!.. அசுரத்தனமான பவுலிங்... புது வரலாறு படைத்த இஷாந்த் சர்மா!
- VIDEO: ‘அவருக்கு அடிக்கவே தெரியல’!.. நியூஸிலாந்து பேட்ஸ்மேனை ‘கிண்டல்’ செய்த கோலி.. காட்டிக்கொடுத்த ஸ்டம்ப் மைக்..!
- ‘இது ஒன்னும் இந்தியா கிடையாது பேட்டை தாறுமாறாக சுத்த’!.. ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் சொன்ன காட்டமான அட்வைஸ்..!