'அவரு' கடைசி வரைக்கும் போராடுனாரு... ஆனா ஏன் 'சூப்பர்' ஓவருக்கு அனுப்பல?... விளக்கம் சொன்ன கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற பெங்களூர்-மும்பை இடையிலான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. இரண்டு அணிகளும் 200 ரன்களை கடந்து மேட்ச் சூப்பர் ஓவர் வரை சென்றதால், எந்த அணி வெல்லும் என கடைசி வரை திரில் மோடிலேயே ரசிகர்கள் காத்திருந்தனர். எனினும் பெங்களூர் அணி மும்பையை கட்டுப்படுத்தி சூப்பர் ஓவரில் சூப்பரான வெற்றி பெற்று விட்டது.

குறிப்பாக மும்பை அணியின் இளம்வீரர் இஷான் கிஷன் அனுபவ வீரர் பொல்லார்ட் உடன் இணைந்து அணியை கரைசேர்க்க வெறித்தனமாக போராடினார். 99 ரன்களில் இருந்த இஷான் சைனி பந்தில் அவுட் ஆக, மேட்ச் சூப்பர் ஓவருக்கு சென்றது. தொடர்ந்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய ரோஹித், ஹர்திக் சொதப்ப மேட்ச் மும்பை கையை விட்டு போனது. இதைப்பார்த்த ரசிகர்கள் பொல்லார்ட்-கிஷன் இருவரையும் களமிறக்கி இருந்தால் மும்பை அணி வென்றிருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை அணி சூப்பர் ஓவரில் ஏன் கிஷனை இறக்கவில்லை என்பதற்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''அவர் முற்றிலும் சோர்ந்து போயிருந்தார். நாங்கள் அவரை அனுப்பலாம் என நினைத்தோம். ஆனால் கிஷன் கம்பர்ட்டபிளாக உணரவில்லை. மேலும் அவர் பிரெஷாகவும் இல்லை. ஹர்திக் பாண்டியா லாங் பந்துகளை நன்றாக அடிப்பார் என எதிர்பார்த்து அவரை அனுப்பி வைத்தோம். இந்த விளையாட்டில் இருந்து நாங்கள் எடுத்துக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்