புஜாரா பேட்டிங்கால் ஆவேசமான ரோஹித்?.. அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் அடித்த புஜாரா.. சிவந்த முகம் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கிட்னி விற்பனைக்கு".. வீட்டு அட்வான்ஸ் கொடுக்க இளைஞர் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் கடைசி லைன்!!

முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னேறிவிடும்.

அப்படி இருக்கையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்திருந்தது.'

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தாலும் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 11 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது.

தடுமாறிய இந்திய அணி

தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடி இருந்த இந்திய அணிக்கு சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது. ரோகித், கோலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற புஜாரா மட்டும் நிலைத்து நின்று ரன் சேர்த்தபடி இருந்தார். ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த காரணத்தினால் பெரிய அளவிலான ரன்களையும் இந்திய அணியால் குவிக்க முடியவில்லை. புஜாரா 59 ரன்களில் அவுட்டான சூழலில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

Images are subject to © copyright to their respective owners.

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதம் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி எளிதில் இலக்கை எட்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புஜாரா பேட்டிங் செய்த சமயத்தில் ரோகித் சர்மா ஆவேசப்பட்டதும் அதன் பின்னர் நடந்த சம்பவத்தால் அவர் சிரித்த சம்பவமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆவேசமான ரோஹித்

புஜாரா பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவர் மிகவும் நிதானமாக ஆடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் இதனை பெவிலியனில் இருந்து பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா அருகே இருந்த இஷான் கிஷானிடம் ஏதோ ஆவேசமாக பேசுவது போல் தெரிந்தது. அப்போது வர்ணணையில் இருந்த ரவி சாஸ்திரி மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கூட இது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

புஜாராவின் அதிரடி சிக்ஸ்

அதேபோல ரோஹித் சர்மா சைகையின்படி புஜாரா அடித்து ஆட வேண்டும் என்பது குறித்து இஷான் கிஷானிடம் அவர் பேசுவதும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே புஜாரா கிரீஸை விட்டு வெளியே இறங்கி வேகமாக சிக்ஸர் ஒன்றையும் பறக்க விட்டிருந்தார். பொதுவாக டெஸ்ட் மேட்சில் நிதானமாக ஆடக்கூடிய புஜாரா மிக ஆக்ரோஷமாக அடித்த சிக்ஸ் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அதேபோல புஜாரா சிக்ஸ் அடித்த பின்னர் அதற்கு முந்தைய ஓவர் வரை ஆவேசமாக இருந்த ரோகித் சிரித்த முகத்துடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Also Read | பாடித்திரிந்த பறவைகளே.. "இது 96 இல்ல 66".. Reunion நிகழ்ச்சியில் மேடையேறிய வயதான பெண்மணிகளின் ஸ்டெப்ஸ் ..!

CRICKET, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்