வெளியேறிய ரோகித் சர்மா.. இந்திய அணியின் புது கேப்டனான பும்ரா! இங்கிலாந்து தொடாரின் லேட்டஸ்ட் அப்டேட்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | முகத்தில் கருப்பு ஸ்டிக்கருடன் விளையாடிய செரீனா வில்லியம்ஸ்.. காரணம் இதுதானா?..!

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சமீபத்தில் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

தற்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்திய சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இன்று மீண்டும் சோதனை முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா தொற்றில் இருந்து இன்னும் மீளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா இந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது. 1932 ஆம் ஆண்டில் இருந்து, இந்தியாவை மிக நீண்ட டெஸ்ட் வடிவத்தில் கேப்டனாக வழிநடத்தும் 36வது கிரிக்கெட் வீரர் பும்ரா ஆவார். குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 29 டெஸ்ட் போட்டிகளில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக தற்போது வளர்ந்துள்ளார்.

தற்காலத்தில் கம்மின்ஸ்க்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாரம்பரியமாக கேப்டம் பொறுப்பு வழங்கப்படுவதில்லை, பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்கள் இம்ரான் கான். வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் போன்ற ஜாம்பவான்கள் பாகிஸ்தான் தேசிய அணியை வழிநடத்தி உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளில், கர்ட்னி வால்ஷ் அந்த அணியை சில போட்டிகளில் வழிநடத்தினார்.

Also Read | வாட்சப் செயலியில் பெண்களுக்கான புதிய வசதி.. மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் பீரியட் டிராக்கர்..!

CRICKET, ROHIT, ROHIT SHARMA, BUMRAH, INDIAN CRICKET TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்