ஒருநாள் போட்டியில் முதல் இந்திய பேட்ஸ்மேன்.. ரோஹித் செய்ய இருக்கும் சம்பவம் என்னன்னு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 3 ஒருநாள் போட்டிகளும் 3 T20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

"யூத்..னு நெனச்சேன்" - போலீஸ் அதிகாரியின் வலையில் சிக்கிய மிஸ் தமிழ்நாடு அழகி - ஆப்பு வைத்த ஆதார் கார்டு..!

ரோஹித் கேப்டன்

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் மீண்டும் இந்த தொடர் மூலம் அணிக்குத் திரும்பியுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியதால் ரோஹித் ஷர்மாவிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா  51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய மைல்கல்லிற்கு மிகவும் நெருங்கியிருக்கிறார் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா.

அதிக சிக்ஸர்கள்

ரோஹித் தற்போது ஒருநாள் போட்டிகளில் 245 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இன்னும் 5 சிக்ஸர்களை அவர் அடிக்கும்பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்னும் சாதனையை அவர் படைப்பார். 34 வயதான ரோஹித் ஷர்மா ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலமாகவே அறியப்படுகிறார்.

நீண்ட ஓய்விற்குப் பிறகு அணிக்குத் திரும்பிய முதல் போட்டியிலேயே அவர் அரைசதம் அடித்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லவேண்டும். நல்ல ஃபார்மில் இருப்பதால் நாளை நடைபெற இருக்கும் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அதே மைதானம்

வெஸ்ட் இண்டீஸ் உடனான 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா வெல்லும்பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். இதனால் நாளைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. நாளைய போட்டியில் இந்தியா வென்று, ரோஹித்தும் இந்த சாதனையை படைத்துவிட்டால் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும்.

Job Alert : 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF ல் வேலை - சூப்பர் சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?

ROHIT SHARMA, INDIAN, UNIQUE LANDMARK, INDIA VS WEST INDIES, ரோஹித் ஷர்மா, கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்