ஸ்ரேயாஸ் அய்யரை நேற்றய போட்டியில் சேர்க்காதது ஏன்? ரோஹித் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தற்போது 3 போட்டிகள் டி20 தொடரில் அந்த அணி பங்கேற்றுள்ளது. இதன்படி, இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

திருமண வரவேற்பின்போது கேட்ட அலறல் சத்தம்.. ஒரே நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!

தனது அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்து வீசிய ரவி பிஷ்னோய், 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதனை அடுத்து ரவிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ரவி பிஷ்னாயை புகழ்ந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதுகுறித்து அவர் பேசுகையில்," ரவி பிஷ்னாய் தனது முதல் போட்டியிலேயே அபாரமாக பந்து வீசினார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவரிடம் வித்தியாசமான ஏதோ ஒன்று இருக்கிறது. அவரை நாங்கள் எப்படி உபயோகிக்கப் போகிறோம் என்பதை பொறுத்தே அது அமைகிறது. ரவியால் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் பந்து வீச முடியும். இதனால் பிற பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகிக்க முடிகிறது" என்றார்.

அணிக்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தனிப்பட்ட வீரர்களின் தேர்வுகள் இதற்கு ஒரு தடையாக விளங்கக்கூடாது எனவும் ரோஹித் பேசும்போது குறிப்பிட்டார்.

ஸ்ரேயாஸ் அய்யரை ஏன் எடுக்கவில்லை?

நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரை பிளெயிங் லெவனில் எடுக்கவில்லை இந்திய அணி. இதுகுறித்து பேசிய ரோஹித்," ஸ்ரேயாஸ் போன்ற ஒரு வீரரை வெளியே அமர வைப்பது மிகவும் சிரமமான காரியம். எங்களுக்கு போட்டியின் நடுவே ஒரு பந்துவீச்சாளர் தேவை இருந்தது. அதனாலேயே ஸ்ரேயாசை போட்டியில் எடுக்க முடியாமல் போனது. சில சமயங்களில் இதுபோன்ற கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி வீரர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்ல விஷயம் தான். வீரர்கள் கிடைக்காமல், அவர்கள் தகுந்த ஃபார்மில் இல்லாததை விட, இந்த மாதிரியான சவால்களைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

மேலும், உலகக்கோப்பை தொடருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரின் பங்களிப்பு தேவைப்படும் எனவும் அதனை அய்யரிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் ரோஹித் தெரிவித்தார்.

இதுபற்றி பேசுகையில்," நாங்கள் ஷ்ரேயாஸ் அய்யர் விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தோம், "உலகக் கோப்பைக்கு  நீங்கள் வேண்டும்" என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அணிக்கு என்ன தேவை என்பதில் அனைத்து வீரர்களும் தெளிவாக இருக்கின்றனர். தனிப்பட்ட வீரரின் தேர்வை விட அணியின் தேவையே முக்கியமானது" என்றார்.

உலகின் மிகப்பெரிய கம்பெனிகளால் தேடப்படும் இந்தியர்.. ரியல் கொசக்ஸி பசப்புகழ் இவர்தான்..!

ROHIT SHARMA, SHREYAS, INDIA VS WEST INDIES, ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்