'நாங்க போட்ட 'பிளான்' எல்லாம் போச்சே'... 'இந்த ஆளு' ...'சல்லி சல்லியா' நொறுக்கிட்டாரே' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாங்கள் இந்திய அணியினை வெல்வதற்காக போட்ட திட்டத்தை எல்லாம் ரோஹித் சர்மா,எளிதாக முறியடித்து விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது,வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதி போட்டியை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தான்.இதற்கு உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான டிக்கெட்களை விட,இந்த போட்டிக்கான டிக்கெட்கள் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது.இதனிடையே நேற்று மான்செஸ்டரில் போட்டி தொடங்கும் முன்பே, மழையினால் போட்டி நடக்குமா நடக்காத என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா,140 ரன்கள் குவித்தார்.கேப்டன் கோலி 77 ரன்கள் எடுத்தார்.இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் போட்டிக்கு பின்பு பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது ''எங்களுடைய தேர்வு சரியாக தான் இருந்தது.டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தாலும்,பந்துவீச்சாளர்கள் சரியாக தங்களது பங்களிப்பை செய்யவில்லை. எங்களது முதல் இலக்கு ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்க செய்வது தான்.ஆனால் எங்களது திட்டத்தை அவர் தவிடு பொடியாக்கி விட்டார்.

ஈரபதம் காரணமாக 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்தும் அதற்கு பயனில்லாமல் போனது.இந்திய வீரர்களின் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது.எங்களது பேட்டிங் தொடக்கமும் நல்ல விதமாகவே இருந்தது.ஆனால் மிடிலில், 3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டோம். அதுதான் தோல்விக்கு காரணமாகிவிட்டது.இந்த தோல்வி எங்களுக்கு மீண்டும் நெருக்கடியை கொடுத்துள்ளது'' என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது கூறினார்.

PAKISTAN, ICCWORLDCUP2019, ICCWORLDCUP, ICC, SARFRAZ AHMED, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்