VIDEO: அய்யோ மறுபடியுமா..! ஜஸ்ட் மிஸ்.. இல்லன்னா பாகிஸ்தான் மேட்ச்ல நடந்த மாதிரி ஆகியிருக்கும்.. பதறிப்போன ரோஹித் ஷர்மா மனைவி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 28-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 49 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இதில் இஷான் கிஷன், நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து ரோஹித் ஷர்மா களமிறங்கினார். அப்போது, தான் எதிர்கொண்ட முதல் பந்தே பவுண்டரிக்கு விளாச ரோஹித் ஷர்மா முயன்றார். ஆனால் பந்து நேராக பவுண்டரில் லைனில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஆடம் மில்னே கைக்கு சென்றது. எதிர்பாராதவிதமாக அவர் கேட்சை தவறவிட்டார்.

அப்போது கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா (Ritika),  ஆடம் மில்னே கேட்சை பிடித்துவிட்டார் என அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து அவர் தவறவிட்டது தெரிந்ததும், சற்று நிம்மதி அடைந்தார்.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இதேபோல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி ரோஹித் ஷர்மா அவுட்டார். நேற்றைய நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அதேபோல் அவுட்டாக இருந்த ரோஹித் ஷர்மா அதிர்ஷ்டவசமாக தப்பினார். ஆனாலும் இஷ் சோதி வீசிய 8-வது ஓவரில் மார்டின் கப்திலிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் ஷர்மா (14 ரன்கள்) ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

INDVNZ, ROHITSHARMA, T20WOLRDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்