VIDEO: செய்தியாளர்கள் சந்திப்புக்கு ‘என்ட்ரி’ கொடுக்கும்போதே ரோஹித் செய்த செயல்.. கவனம் பெறும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

VIDEO: செய்தியாளர்கள் சந்திப்புக்கு ‘என்ட்ரி’ கொடுக்கும்போதே ரோஹித் செய்த செயல்.. கவனம் பெறும் வீடியோ..!
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது.

Rohit count how many journalists are there before press conference

இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 74 ரன்களும், கே.எல்.ராகுல் 69 ரன்களும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 35 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபரா வெற்றி பெற்றது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டி முடிந்த ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கு இடத்துக்கு வந்த ரோஹித் ஷர்மா, நாற்காலியில் அமரும் முன், செய்தியாளர்கள் எத்தனை பேர் வந்துள்ளனர் என்று எண்ணிப் பார்த்தார்.

இதனை அடுத்து, நீண்ட நாட்களுக்கு பின் நேரில் சந்திப்பதாக சிரித்துக்கொண்டே கூறிவிட்டு ரோஹித் ஷர்மா அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. முன்னதாக கொரோனா தொற்று காரணமாக வீடியோ காலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

INDVAFG, ROHITSHARMA, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்