VIDEO: ‘அடக்கொடுமையே’!.. கிரிக்கெட் வரலாற்றுலேயே இப்படி ஒரு சம்பவத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் தனது ஜெர்சியை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதை தவறவிட்டு பவுண்ட்ரி ஆன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி போல், அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் அபுதாபி அணியில் விளையாடிய ரோஹன் முஸ்தபா என்ற வீரர், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வியர்வை காரணமாக ஜெர்சி ஈரமாகிவிட்டதால் வேறு ஜெர்சியை கொண்டு வர சொல்லி மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் ஷாட் அடிக்க அது நேராக பவுண்டரிக்கு வந்துக்கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத முஸ்தபா, ஜெர்சியை பாதி அணிந்தபடியே வேகமாக பந்தை தடுக்க ஓடினார்.

ஆனால் அதற்குள் பந்து பவுண்டரியை கடந்தது. இதனைக் கண்ட பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் சக வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்