வீடியோ மெசேஜில் கோலி சொன்ன விஷயம்.. சர்ப்ரைஸ் கொடுத்த ஃபெடரர்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அண்மையில் ஓய்வுபெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், விராட் கோலியின் வீடியோவுக்கு பதில் அளித்திருக்கிறார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உலகத்தின் மிகப்பெரிய திட்டம்.. 10 ஆயிரம் ஏக்கரில் மாஸ் காட்ட இருக்கும் இந்தியா.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

ரோஜர் பெடரர்

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசில் என்ற பகுதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தவர் ரோஜர் ஃபெடரர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஃபெடரர் அறிவித்தது, உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடைசி போட்டி

இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற தனது இறுதி போட்டியான லேவர் கோப்பை போட்டியில் பங்கேற்றார் ஃபெடரர். இதில் ஐரோப்பா அணிக்காக ஃபெடரர், நடால் ஆகியோர் களமிறங்கினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்  பெடரர் -  நடால் இணை தோல்வியை தழுவியது. இதனையடுத்து தனது இறுதிப்போட்டி குறித்து பேசிய ஃபெடரர் சக வீரர்கள் மற்றும் தனது மனைவிக்கு நன்றி தெரிவித்தார்.

 

விராட் கோலி

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, ஃபெடரரின் ஓய்வு அறிவிப்பை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,"2018ல் ஆஸ்திரேலிய ஓபனில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் வாழ்நாளில் அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. டென்னிஸ் ரசிகர்களை தாண்டி உலக அளவில் உங்களை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். வேறு எந்தவொரு விளையாட்டு வீரரும் செய்யமுடியாத சாதனை அது. அனைத்து காலங்களிலும் நீங்களே மிகச்சிறந்த வீரர். ஓய்வுக்கு பிறகான உங்களது வாழ்க்கையிலும் விளையாட்டுக்களத்தில் நீங்கள் பெற்றதை போல வெற்றியடைய வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வீடியோவிற்கு ஃபெடரர் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர்,"நன்றி விராட் கோலி. விரைவில் இந்தியாவிற்கு வருவேன் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!

CRICKET, KOHLI, VIRAT KOHLI, ROGER FEDERER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்